வாழ்வியல்

வேப்பிலையில் அடங்கியுள்ள பல்வேறு மருத்துவ பண்புகள்–3

* சரும பிரச்சினைகளை சரி செய்யும்
ஒரு கப் வேப்பிலைகளை நீரில் கொதிக்க வைத்து அவை நிறம் மங்கி மென்மையானதும் அதனை வடிகட்டி ஒரு பாட்டிலில் அடைத்து ஆற வைக்கவும். தினசரி நீங்கள் குளிக்கும் நீரில் இந்த வேப்பிலை நீரை சிறிது கலந்து குளித்து வந்தால், சரும இன்ஃபெக்க்ஷன், பருக்கள் மற்றும் உடல் துற்நாற்றம் ஆகியவற்றை சரி செய்யலாம். சில இலைகளை நீர் சேர்த்து அரைத்து அதனை ஃபேஸ் பேக் மூலம் முகத்தில் பூசி வந்தால் பருக்கள் நெருங்காது. பொதுவாக வேப்பிலைகளை அரைத்து அந்த பேஸ்டை பூசுவதால் காயங்கள் குணமடைவதுடன் இன்ன பிற சரும பாதிப்புகளும் நீங்கும். வேப்பிலை நீர் ஒரு சிறந்த ஸ்கின் டோனர் ஆகும். அதனை பயன்படுத்தினால் நோய் தொற்றுக்கள் மற்றும் ஒவ்வாமை போன்ற பிரச்சினைகள் குணமடையும்.
* இரைப்பைக்குடல் பாதுகாப்பு
வேப்பிலை இரைப்பைக்குடலில் ஏற்படும் அழற்சியை குணப்படுத்தும், அல்சர்களை சரி செய்யும். உப்புசம், வயிற்று பிடிப்பு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று இன்பெக்க்ஷனை தடுக்கிறது. செரிமானம் மற்றும் கழிவு பொருட்கள் வெளியேற்றத்தையும் சீராக்கும்.
* பூச்சிகளை விரட்டும்
வேப்பிலை அனைத்து வகையான பூச்சிகளையும் விரட்டும் சக்தி கொண்டது. வேப்பிலை நீரில் நனைத்த பஞ்சினை, உங்களது ஜன்னலுக்கு அருகில் வைத்தால் அல்லது வேப்பிலையை கொளுத்தினால் பூச்சிகள் அண்டாது. கொசுக்களை விரட்ட இது ஒரு இயற்கையான வழியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *