நாகை, ஆக. 12–
வேதாரண்யம் அருகே வீட்டின் மொட்டை மாடியில் மின்சாரக் கம்பியை பிடித்து தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம்,வேதாரண்யம் அருகே செண்பகராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி மு. குமரேசன் (35), புவனேஸ்வரி(28).திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் குழந்தைகள் இல்லை. இத்தம்பதி வீட்டின் மொட்டை மாடியில் அருகே செல்லும் உயர் சக்தி மின்கம்பியை பிடித்த நிலையில், மின்சாரம் தாக்கி சடலமாகக் கிடந்தனர். கடன் தொல்லையால் தம்பதியர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கரியாப்பட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.