அத்தனை கூட்டத்திலும் எப்படியாவது தன் வேண்டுதல் நிறைவேறி விட வேண்டும் என்று கடவுளை ஒரு மனதாக நினைத்துக் கொண்டிருந்தான் சரவணன். அவன் கண்ணில் கண்ணீர் பெருகியது .அவன் மட்டுமல்ல அவனைச் சுற்றியுள்ள நண்பர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் அவன் வேண்டுதலின் சிறப்பு. எப்போது அவன் கோவிலுக்கு வந்தாலும் அவனுக்கு மட்டும் வேண்டுவதில்லை. தன் குடும்பம், தன் நண்பர்கள் . தன்னைச் சுற்றி இருப்பவர்கள் .இந்த உலகம் எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வான்.
அப்போது அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் முந்தி கொண்டு சென்றதால் அந்த சலசலப்பு என்பதைத் தெரிந்து கொண்டான்.
” நான் முன்னாடி நிக்கிறப்ப நீ எப்படி எனக்கு முன்னாடி போகலாம் எனக்கு பின்னாடி வந்து நில்லு என்று ஒருவர் எகிற
” நான் உங்களுக்கு முன்னாடி நின்றிருந்தேன். அதனால தான் நான் இப்ப நான் முன்னாடி போறேன் “
என்று இன்னொருவர் சொல்ல
” பொய் சொல்லாதீங்க. சாமி கும்பிட வந்திருக்கீங்க .பொய் சொல்லித்தான் சாமி கும்பிடணுமா? அப்படி சாமி கும்பிட்டு என்னத்த சாதிக்க போறீங்க?
என்று வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது .இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சரவணன்
” சார் , நாம கோயிலுக்கு சாமி கும்பிட வாரது மன அமைதிக்காகவும் நம்ம பிரச்சனை தீரனும் அதுக்கு தான் இங்க வாராேம் . இங்கேயும் வந்து நீங்க இப்படி பிரச்சினை பண்ணினா எப்படி ? அமைதியா போய் சாமி கும்பிடுங்க சார்”
என்று அவர்களைச் சமாதானப்படுத்தி வருவதற்குள்
” சீக்கிரம் இறங்கி போங்க .சீக்கிரம் இறங்கி போங்க” என்று ஒரு குரல் கேட்டது
“சீக்கிரம் இறங்கி போகவா? என்ன இது? அபசகுமான வார்த்தையா இருக்கே?
என்று சத்தம் வரும் திசை நோக்கி திரும்பினான் சரவணன். கோயிலில் வேலை செய்து கொண்டிருக்கும் ஒருவர்தான்
” சீக்கிரம் இறங்கி போங்க. சீக்கிரம் இறங்கி போங்க” என்று கத்திக் கொண்டிருந்தார். எதற்காக ஒரு கத்திக் கொண்டிருக்கிறார் “
என்று அவரிடம் கேட்டபோது
” இங்கே கூட்டம் அதிகம் போடக்கூடாதுங்க சீக்கிரம் இறங்கி போங்க. உங்களை மாதிரி கோடிக்கணக்கான பேரு சாமி கும்பிட வர்றாங்க. இறங்கி போங்க இறங்கி போங்க ” அவர் கத்த
சரவணன் அந்தப் பேச்சுக்கு செவி சாய்க்காமல் ,சீக்கிரம் இறங்கி போங்க என்ற வார்த்தை அவன் மனதில் ஒரு காயத்தை ஏற்படுத்தியது. அப்படி பேசும் நபரை அழைத்த சரவணன்
” இங்க வாங்க சாமி கும்பிட வர்றது ஒரு பாசிட்டிவ் எனர்ஜி இருக்கனும் அப்படிங்கறதுக்காகத்தான் இனிமேல் இந்த வார்த்தையை நீங்க பயன்படுத்தாதீங்க சீக்கிரம் இறங்கி போங்க அப்படின்னு சொல்றதை விட ,வேகமா ஏறி வாங்க அப்படின்னு சொல்லுங்க அதுல ஒரு பாசிட்டிவ் எனர்ஜி இருக்கும் .இறங்கிப்போ அப்படிங்கறது நெகட்டிவ். ஏறி வா அப்படிங்கறத பாசிட்டிவ். அதனால இனிமேல் இந்த வார்த்தைய நீங்க பயன்படுத்தாதீங்க”
என்று சரவணன் சொல்ல
“இது பல வருஷமா சொல்லிட்டு இருக்க வார்த்தைங்க. இது எப்படி மாத்த சொல்றீங்க ?
என்று அந்த நபர் சரவணனிடம் சொல்ல இதற்கு எதுவும் பேசாமல் இருந்தான் சரவணன் .சிறிது நேரம் கூட்டம் முன்னேறி சென்றது.
” வேகமா ஏறி வாங்க . வேகமா ஏறி வாங்க ” என்ற வார்த்தையைச் சொல்லிக் கொண்டிருந்தார் அந்த கோயில் ஊழியர். திரும்பிப் பார்த்தான் சரவணன்
“தம்பி வேகமா ஏறி போய் சாமி கும்பிடுங்க. உங்க வார்த்தை உண்மையிலேயே என்னை மாத்திருச்சு” என்று அவர் சொல்ல சிரித்துக் கொண்டே கடவுளிடம் தன் வேண்டுதலை வைத்தான் சரவணன்.
“வேகமா ஏறி வாங்க . வேகமா ஏறி வாங்க உங்க வேண்டுதல் நிறைவேத்திக்குங்க’ என்ற அந்த கோயில் ஊழியர் கத்திக் கொண்டிருந்தார். அந்தச் சத்தம் சரவணன் காதில் விழுந்து கொண்டிருந்தது.
#சிறுகதை