செய்திகள்

மிக வேகமாக பரவும் கொரோனா: மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

புதுடெல்லி, மார்ச்.31-

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒட்டு மொத்த நாடும் ஆபத்தின் பிடியில் உள்ளதாக மத்திய சுகாதரத்துறை எச்சரித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால் நேற்று நிருபர்களுக்கு அளித்தப் பேட்டியில் கூறியதாவது:-

நாட்டின் கொரோனா நிலவரம், மோசமான நிலையில் இருந்து மிக மோசமான நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாக சில மாநிலங்களின் நிலைமை பெரிதும் கவலைக்குரியதாக இருக்கிறது. எனவே, எந்த மாநிலமும், எந்த மாவட்டமும் மெத்தனமாக இருக்கக்கூடாது.

மிக தீவிரமான சூழ்நிலையை நாம் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். ஆகவே, கொரோனாவை கட்டுப்படுத்தி, உயிர்களை காப்பாற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறினர்.

மேலும் சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறும்பொழுது:-

நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் அதிகமாக உள்ள 10 மாவட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 8 மாவட்டங்கள், மகாராஷ்டிர மாநிலத்திலுள்ளன. டெல்லி, பெங்களூரு ஆகிய மாவட்டங்களும் இதில் அடங்கும் எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *