வாழ்வியல்

வெள்ளை கருவைக்கொண்டு முகப்பரு போக்கும் முறை–1

ஒவ்வொருவருக்கும் தங்களின் சருமத்தில் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் முகத்தில் ஆங்காங்கு முகப்பருக்கள் வந்துவிடும். முகப்பருக்கள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாவிட்டாலும், அவை சருமத்தில் தழும்புகளை ஏற்படுத்திவிடும். இதனால் சருமத்தின் அழகு தான் பாழாகும்.
முகப்பருக்கள் எதனால் ஏற்படுகிறது என்றால், மன அழுத்தம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், அதிகப்படியான உடல் வெப்பம் மற்றும் சுத்தமின்றி இருப்பது தான். கீழே கொடுக்கப்பட்டுள்ள முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு செய்யப்படும் சில மாஸ்க்குகளைப் போட்டு வந்தால், விரைவில் முகப்பருக்களைப் போக்குவதோடு, பருக்களால் ஏற்பட்ட தழும்புகளையும் நீக்கவிடலாம்.
வெள்ளைக்கரு, எலுமிச்சை
இந்த ‘பேஸ் மாஸ்க்’ எண்ணெய் பசை சருமத்தினர் மற்றும் பருக்களால் அவதிப்படுவோருக்கு ஏற்றது. இதனால் பருக்கள் மட்டுமின்றி, சருமத்தின் நிறமும் அதிகரிக்கும். இந்த மாஸ்க் செய்வதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி, அத்துடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை ஊற்றி நன்கு அடித்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, முதலில் வெதுவெதுப்பான நீரில் கழுவி, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
வெள்ளைக்கரு, தேன், எலுமிச்சை
இந்த ‘மாஸ்க்’ செய்ய முட்டையின் வெள்ளைக்கருவுடன், 1 டீஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்தால் பருக்கள் மட்டுமின்றி, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையும் நீங்கிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *