சிறுகதை

வெள்ளத்தின் வெகுமதி- ராஜா செல்லமுத்து

..

புயல், மழை, வெள்ளம் மனிதர்களுக்கு எவ்வளவோ பாதிப்பைத் தந்து வாழ்க்கைத் தரத்தை முடக்கி இருந்தாலும் அது ஒரு சில நன்மைகளை செய்து விட்டு தான் சென்றிருக்கிறது என்பதை ஆணி அடித்தால் போல முருகனிடம் சொல்லிக் கொண்டிருந்தான் பாலு

அது எப்படி சொல்றீங்க பாலு? நீங்க சொல்றது ரொம்ப தப்பு. மனுசனோட வாழ்க்கை தரம் காெரஞ்சிருக்கு .இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்காேம். இந்த வெள்ளம் என்னென்னமோ பிரச்சனை கொண்டு வந்து மக்களுக்கு கொடுத்திருக்கு .இத போய் நல்லதுன்னு சொல்றீங்களே என்று முருகன் பாலுவை எகிற முன்னை இருந்ததை விட கொஞ்சம் சத்தமாகச் சிரித்த பாலு.

எப்பவுமே பிளஸ் இருந்தா மைனஸ் இருக்கும். மைனஸ் இருந்தா பிளஸ் இருக்கும். நெருப்பு இருந்தா தண்ணீர் இருக்கும்; வானம் இருந்தா பூமி இருக்கும். இப்படி எல்லாமே எதிர் எதிராக தான் இருக்கும் முருகா .இத பொதுவா நான் சொல்லல.

எனக்கு நேர்ந்த என் குடும்பத்தில நிகழ்ந்த ஒரு விஷயத்த தான் நான் உங்களுக்கு சொல்றேன் என்று பூடகம் போட்டான் பாலு.

அவன் பதில் என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்த முருகனுக்கு பாலுவே பதில் சொன்னான்.

எங்க வீட்ல 10 ,25 வருஷத்துக்கு மேல பழைய பொருட்களைப் போட்டு என் பொண்டாட்டி வீட்ட அடச்சி வச்சிருந்தா. இதெல்லாம் வேண்டாம்மா தூக்கி போட்டுரு பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத பாெருட்கள வீசிருன்னு எத்தனையோ தடவை சொல்லிப் பாத்தேன். அவ கேட்கல. திட்டிப் பாத்தேன். அப்பவும் அவ செவிசாய்க்கல . என்னைக்காவது ஒரு நாள் இந்த வெட்டியான பொருள்களுக்கு எல்லாம் ஒரு தீர்வு கிடைக்கும்னு நினைச்சேன். அது இப்பதான் நடந்திருக்கு. புயல், மழை பேஞ்சு வீட்டுக்குள்ள தண்ணி வந்து மொத்த பொருளையும் நனைச்சுப்புடுச்சு. அப்ப எல்லாம் நான் சொன்னத காதுல கேட்காத என் பொண்டாட்டி மழi வெள்ள வீட்டுக்குள்ள வந்து நிறைச்சி வெட்டியான பொருள் எல்லாம் சேதப்படுத்தவும் இப்ப தான் அவளுக்கு புத்தியில சுர்ன்னு ஏறிச்சு .

இந்தப் பொருளை எல்லாம் வேண்டாம்னு தூக்கி வீசிடுவோம்ன்னா, 20 வருஷமா வீட்டுக்குள்ள ஒக்காந்து இருந்த வெட்டியான பொருள்கள் எல்லாம் இந்த ஒரே மழை வெள்ளத்துல வெளியே வந்துருச்சு.

சரி நம்ம வீட்ல தான் இப்படி பொருள்களை எல்லாம் தூக்கி போட்டாேன்னு நெனச்சிட்டு வீதிக்கு வந்து பாத்தா தெருத்தெருவாக குப்பை கூளம் குமுஞ்சு கிடக்கு. அப்போ இம்புட்டு குப்பை, கூளங்க கூடத்தான் மனுஷன் வாழ்ந்துட்டு இருந்திருக்கிறான்னு நெனச்சேன்.

மொத்த குப்பையும் அள்ளிப்போட்டு இப்பதான் புதுசா வாழ்க்கையை மனுசன் ஆரம்பிக்கிறது மாதிரி, இந்த புயல், மழை, வெள்ளம் ஒரு புது வாழ்க்கையை மனிதர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கு.

அதனால தான் சொன்னேன். இந்த புயல், வெள்ளம் நல்லது. அதனாலதான் சிலருடைய வாழ்க்கை மேம்பட்டிருக்கு . அதுல என் வாழ்க்கையும் ஒன்னு.

ஓஹோ நீங்க அப்படி சொல்றீங்களா ?எங்க வீட்டுல கூட பழசுபட்ட பாெருள்கள என் பொண்டாட்டி வச்சி வெளியே போட மாட்டேன்னு சொல்லிட்டு இருந்தா. நீங்க சொன்ன அதே மழை வெள்ளத்தில தான் அந்த பொருள்கள் எல்லாம் வெளிய வந்துச்சு.

அப்படின்னா அந்த புயல், மழை வெள்ளம் நல்லதுன்னு நானும் தான் நினைக்கிறேன் என்றான், முருகன்.

இவர்களைப் போலவே இன்னும் சில பேர்கள் ,

ஆமா இந்த புயல் வெள்ளத்தால தான் வீட்டுக்குள்ள இருந்த பழைய பொருள்கள் எல்லாம் வெளிய வந்திருக்கு என்று மொத்த பேரும் ஆமோதிக்க

இந்த மாதிரி புயல், மழை வெள்ளம் அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவ வந்து வீட்டுக்குள்ள இருக்குற பழைய பொருள்களையெல்லாம் அள்ளிவிட்டு போனா நல்லதுன்னு நினைச்சாங்க.

கைதட்டி, புயல் மழைக்கு நன்றி சொன்னார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *