சினிமா

வெளியாகிறது பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 9ம் பாகம்

சென்னை, ஆக.4–

யுனிவர்சல் பிக்சர்ஸ் திரைப்படங்களில் ஒன்றான பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 9ம் பாகம் படத்தை 5ந் தேதி இந்தியாவில் வெளியிடுகிறது. இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியிடப்படும் முதல் பெரிய பட்ஜெட் அதிரடி திரைப்படம் இதுவாகும். இப்படம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியிடப்படுகிறது.

பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படம் சட்டவிரோத கார் பந்தயத்தைப் பற்றிய கதையாகத் தொடங்கி, திருட்டு மற்றும் உளவுத்துறையில் ஈடுபட்ட ஒரு நெருக்கமான குழுவின் கதையாக உருவானது. 2001ம் ஆண்டு வெளியான முதல் படத்திலிருந்து உலகளவில் 5 பில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இந்த திரைப்படம் உலகளாவிய வெளியீட்டில் 500 மில்லியனுக்கும் அதிகமான தொகையை வசூலித்துள்ளது.

சமீபத்திய அத்தியாயத்தில், டோம் (வின் டீசல்) மற்றும் லெட்டி (மைக்கேல் ரோட்ரிக்ஸ்) இளம் மகனுடன் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்த போது ஒரு ஆபத்தான சதித்திட்டத்தைத் தடுக்க உதவுமாறு கேட்கப்பட்டனர். இந்த முறை சாகசம் பிரம்மாண்டமாக வெளிவரவுள்ளது. குறிப்பாக ஒரு ராக்கெட் ஒரு காரை விண்வெளியில் செலுத்தும்போது வரும் கார் சேஸ்கள் அதிக சுவாரஸ்யமானதாக இருக்கும்.

எப் 9, பிரபலமான ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் தொடரில் ஒன்பதாவது அத்தியாயமாகும். இது ஏற்கனவே அமெரிக்கா, கனடா, சீனா, ரஷ்யா, கொரியா, ஹாங்காங் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வெளியாகிவிட்டது. இந்த திரைப்படத்திற்கு உலகளாவிய ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது இருக்கும் கோவிட்-19 நோய்த் தொற்றால் இந்த திரைப்படத்தின் வெளியீடு ஒரு வருடத்திற்கும் மேலாக தாமதமானது.

எப் 9 படத்தை ஜஸ்டின் லின் இயக்கியுள்ளார். மேலும் அவர் டேனியல் கேசியுடன் சேர்ந்து திரைக்கதையையும் எழுதியுள்ளார். 9வது அத்தியாயம் பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் (2017)ன் தொடர்ச்சியாகும். பாஸ்ட் அண்ட் ப்யூரியஸின் முழு நீள பத்தாவது அத்தியாயம் அதன் பிரான்சைஸ் முழுக்க ஒரே நேரத்தில் வெளியிடப்படும். வின் டீசலைத் தவிர்த்து மைக்கேல் ரோட்ரிக்ஸ், டைரெஸ் கிப்சன், ஜோர்டானா ப்ரூவ்ஸ்டர், கிறிஸ் பிரிட்ஜஸ் (அகா லுடாக்ரிஸ்), நாதலி இம்மானுவேல், ஹெலன் மிர்ரன் மற்றும் சார்லிஸ் தெரோன் ஆகியோர் தங்கள் பாத்திரங்களை மீண்டும் நடித்துள்ளனர். இந்த நட்சத்திர வரிசையில் ஜான் சினா, கார்டி பி மற்றும் ஓசுனா ஆகிய புதிய முகங்களும் இணைய உள்ளனர்.

ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் எப் 9 படம் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *