செய்திகள்

வெளிநாட்டின் சிறைகளில் கைதிகளாக 8278 இந்தியர்கள் : வெளிவிவகார இணையமைச்சர் தகவல்

டெல்லி, ஏப். 9–

வெளிநாட்டு சிறைகளில் மொத்தம் 8278 இந்தியர்கள் கைதிகளாக உள்ளனர் என்று, இந்திய ஒன்றிய வெளிவிவகார இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்து பேசிய ஒன்றிய வெளிவிவகார இணையமைச்சர் முரளீதரன், அமைச்சகத்திடம் உள்ள தகவலின்படி, விசாரணை கைதிகள் உட்பட வெளிநாட்டு சிறைகளில் உள்ள இந்திய கைதிகளின் எண்ணிக்கை 8,278 என்றார்.

அமீரகத்தில் அதிகம்

இவற்றில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 1,480 இந்தியர்கள் கைதிகளாக உள்ளனர். இதற்கு அடுத்து சவுதி அரேபியாவில் 1,392 இந்தியர்களும், நேபாளத்தில் 1,112 இந்தியர்களும் கைதிகளாக உள்ளனர். சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்கள் மீது போதை பொருள் கடத்தல், கொலை மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன.

பாகிஸ்தானில் 701 இந்தியர்கள் அடைப்பட்டுள்ளனர். குஜராத் பகுதியில் கடலில் மீன்பிடிக்க சென்று, பாகிஸ்தானிய அமைப்புகளால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.