ஆர்.முத்துக்குமார்
நேற்று (ஜூலை 2) உலக யுஎப்ஓ (UFO) தினமாக அறிவிக்கப்பட்டு வேறு கிரகவாசிகள் பறக்கும் தட்டுக்களில் வந்துள்ள சர்ச்சைகளையும் சுவாரஸ்யங்களையும் பற்றி கூர்ந்து கவனிக்க வேண்டிய நாளாக கருதப்படுகிறது.
அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள், ஆங்கிலத்தில் unidentified flying objects என்பதை தான் UFO என்கிறோம். இந்தப் பெயர் 1947–ல் ஜூன் 24 அன்று ஒரு தனியார் நிறுவன விமானி கென்னெத் அர்னால்ட் (Kenneth Arnold) என்பவரால் தெரியப்படுத்தப்பட்டது.
ஊடகங்களில் இது பற்றிய செய்திகள் தலைநகர் வாஷிங்டனில் வேறு கிரகவாசிகள் வந்து விட்டனர் என்ற செய்தி வெளியானது.அது பரப்பரப்பாக ‘திகில்’ செய்தியாக காட்டுத் தீ போல் பரவியது.
பிறகு 1952–ல் ஜூலை 2 அன்று இதே வாஷிங்டன் நகரில் பல இடங்களில் பலர் UFO என்ற வெளிக் கிரகவாசிகளின் பறக்கும் தட்டு வந்ததாகவும் அதைப் பார்த்ததாகவும் செய்தி வந்தது. மேலும் ரேடார் கருவிகளிலும் அப்படிப்பட்ட பிம்பங்கள் பதிவானதாக அறிவித்தனர்.
பின் நாளில், 2001–ல் துருக்கியைச் சார்ந்த ஓர் யுஎப்ஓ ஆய்வாளர் இவ்விரண்டில் ஜூலை 2ல் விஞ்ஞானப்பூர்வமாக இருப்பதை சுட்டிக்காட்டி இத்தேதியை உலக யுஎப்ஓ தினமாக அறிவிக்க நடவடிக்கை எடுத்து அங்கீகாரமும் பெற்று விட்டார்.
உலகப் பிரச்சனைகள் கை நிறைய இருக்க மிக அந்நியமாகவும் சாத்தியமே இருக்க முடியாது என்பது போல் இருக்கும் வெளி கிரகவாசிகளின் பறக்கும் தட்டு வருகை பற்றிய ஆய்வுகள் தேவையா?
நமது புராதனமான பாரம்பரிய வரலாற்றுக் கதையான ராமாயணத்தில் ராவணன் பறக்கும் புட்பக விமானத்தில் வந்து சீதையை கடத்திச் சென்றது வரை, பல இடங்களில் சுட்டிக் காட்டப்பட்டு இருக்கிறது.
தரைப் போக்குவரத்துகளும் கடல் போக்குவரத்தும் மட்டும் இருந்த அந்த பண்டைய காலத்தில் ஆகாயத்தில் பறக்கும் விமான சங்கதிகள் சாத்தியமா?
ஒன்றை நாம் மறந்து விடக்கூடாது, பூமிக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திர மண்டலமான ‘பிராக்சிமா சென்டாரை’க்கு போக நான்கு ஆண்டுகள் ஒளியின் வேகத்தில் பயணித்தாக வேண்டும். ஒரு ஒளி ஆண்டு என்பது என்னவென்றால் ஒளிக்கீற்று ஒரு நொடியில் 1,86,000 மைல்கள் வேகத்தில் பயணித்தால் கடக்க வேண்டிய தூரம் ஆகும்.
அதாவது பல ஆயிரம் லட்சம் நாட்களுக்குப் பிறகே அதுபோன்ற கருவியைக் கண்ணால் பார்க்க முடியும்!
அப்படிப்பட்ட பயணத்தை மேற்கொள்ள நமது உடல்வாகும் அன்றாட பணிகளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகுதான் அதை பார்க்க முடியும்.
ஒருவேளை பார்க்க நேர்ந்தால் மட்டுமே அது எப்போது புறப்பட்டது? அது பல இயற்கை இடர்களையெல்லாம் கடந்து, விஞ்ஞான நுட்பங்களையெல்லாம் கொண்டு தானே வரமுடியும்! அப்படி ஓர் கருவி நமக்கு வசப்பட்டால் வெளிக்கிரக மனிதனின் கண்டுபிடிப்புகள் விஞ்ஞான அறிவு போன்ற பல புதுப்புது அம்சங்கள் பற்றி ஓர் அளவு தெரிந்து கொள்ள அது நல்ல வாய்ப்பாகும்.
இன்று நாம் எல்லா புதுமைகளின் உச்சத்தில் இருப்பதால் நம்மில், யாருக்கும் அடுத்த தலைமுறை விஞ்ஞான கருவிகள் பற்றிய கனவுகள் ஏதுமின்றி இருந்து விடக்கூடாது.
எல்லாவித கட்டுமான வடிவமைப்புகளில் புதுமைகள் வருவதை காண்கின்றோம், ஆனால் மின் காந்தத்தை உணர்ந்தது போல், பூமியின் ஈர்ப்பு சக்தியை பற்றிய எண்ணங்களை போன்ற புதிய பட்வார்த்தனமான உண்மைகள் பற்றிய புலமை ஏதும் புதிதாக எழவேயில்லை அல்லவா?
ஒருவேளை நமது வெளிக்கிரக கருவிகள் என்றேனும் நம்மிடம் வாழ வந்து விட்டால் அதன் பயனாக வேறு பல விண்வெளி விஞ்ஞான உண்மைகள் பற்றித் தெரிய வரும்!
அது போன்ற மாற்றுச் சிந்தனைகள் வந்தால் மட்டுமே நமது இயற்கை சவால்கள், தொலை தூர நட்சத்திரங்களுக்கு பயணிப்பது போன்ற சாத்தியக் கூறுகள் ஆரம்பமாகும்!
அது சாத்தியமா? நாம் சந்திரனில் காலடி வைத்த நாளில் ஒரு நாளே ஆய்வுகள் செய்ய முடிந்தது!
நமது பூமிக்கு வேற்று கிரகவாசிகள் வந்து தரையிரங்கினால் குறைந்தது 10 வருடங்களாவது ஆய்வுகள் மேற்கொண்டாக வேண்டும் அல்லவா?
அச்சந்தர்பத்தில் நாம் அவர்களிடம் பல இயற்கை விந்தைகளை தெரிந்து கொள்ள வழி பிறக்கலாம்.
இப்படிப்பட்ட சிந்தனைகளை இன்றைய இளம் சமுதாயத்தில் வித்திடவே உலக யுஎப்ஒ நாள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் மீண்டும் சந்திர மண்டலத்திற்கு நமது சந்திரயான் விண்கலம் செல்லத் தயாராகி வரும் நிலையில் விண்வெளி படிப்புகள் மற்றும் தேவைப்படும் தொழில் நுட்பங்களை வடிவமைப்பாளர்களுக்கும் பல புதுப்புது பணிகள் வரும் நாட்களில் உருவாகி விடும்!