சிறுகதை

வெற்றி நமதே! – எம்.பாலகிருஷ்ணன்

“நம்ம மகள் ருக்மணிக்கு என்ன ஆச்சு? வீட்டில் யாரிடமும் சரியாக பேச மாட்டேன்கிறாள்; அதுவும் நீட் தேர்வு வரக்கூடிய நேரத்தில் காமராஜன் தன் மகளின் வித்தியாசமான நடவடிக்கையைப் பார்த்து குழம்பிப் போனான்.

மனைவி ராஜேஸ்வரியிடம் இதைப்பற்றி கேட்டான். அதற்கு அவள் நானும் தான் கவனிச்சிகிட்டு இருக்கேன். இவள, இந்த ஒரு வாரமா சரியா பேசுறது இல்ல; உங்ககிட்ட நானே சொல்லாலாமுன்னு நினைச்சேன் நீங்களே இதை பத்தி பேசிட்டீங்க என்றாள்.

மகள் கலகலவென்று வீட்டில் பேசுவாள். பட்டாம்பூச்சி பறப்பது போல் சுறுசுறுப்பாக இருப்பாள் அப்படி இருந்தவள் ஏன் இப்படி?

இருவரும் புரியாமல் தவித்தனர் இதை இப்படியே விடக்கூடாது அவளிடமே கேட்க வேண்டியதான்” இருவரும் தீர்மானமாக முடிவெடுத்தனர்.

வங்கியில் பணிபுரியும் காமராஜன் அவன் வேலைக்குப் போவதற்கு முன்பு எப்படியாவது மகளிடம் பேசவேண்டும் என்று பலநாள் எண்ணுவான்; ஆனால், அவசரத்தில் மறந்து விடுவான். இன்று நல்ல சந்தர்ப்பம் கிட்டியது. மனைவியை அழைத்தான் “ராஜேஸ்வரி வா, நம்ம ருக்மணி கிட்ட இதைபற்றி பேசுவோம் என்று மனைவியிடம் கூறினான்.

சோபாவில் உட்கார்ந்திருந்த மகளிடம் “ருக்குமணி இங்கே வாம்மா” என்று அழைத்தான் காமராஜன் தந்தையின் குரல்கேட்டு ருக்மணி அவன்அருகில் மெதுவாக நடந்து வந்து நின்றாள். எப்போதும் அவளை அழைத்தாலும் உடனே மின்னல் மாதிரி வேகமாக வந்து நிற்பாள். ஆனால் இன்று அவன் அழைத்ததும் மெதுவாகவல்லவா வருகிறாள்? “என்னங்கப்பா என்று சோர்ந்துபோனவள் போல் கேட்டாள் ருக்மணி.

“என்னடா உனக்கு உடம்புக்கு முடியலையா? என்ன செய்யுது ஏன் இப்படி டல்லாவே இருக்க? ஒருவாரமா என்கிட்டேயும் அம்மாகிட்டேயும் சரியா பேச மாட்டேன்ங்கிற? காமராஜனின் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டும் ருக்மணி அமைதியாக இருந்தாள்.

என்னம்மா அப்பா பேசிகிட்டு இருக்கேன் நீ பதில் சொல்லாமா இருக்கே என்றான்.

நான் நல்லாதப்பா இருக்கிறேன் என்று பதிலளித்தாள்.

“இல்லேம்மா பாத்தா அப்படி தெரியலயே என்று காமராஜன் கூறியதும் அவள் கோபமானாள்,

“அப்பா… அம்மா நான் எப்பவும் போல தான் இருக்கேன் என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க இதைக்கேட்ட அவளின் அம்மா ராஜேஸ்வரி,

“ஏண்டி பொய் சொல்ற நானும் கவனிச்சிட்டு தான் வர்றேன். எங்ககிட்ட ஒழுங்கா பேசமாட்டேன்ங்கிற; இதை நம்ப சொல்றீயா? உண்மைய சொல்லுடி; என்ன உனக்கு பிரச்சனை. படிக்கிற இடத்துல எதாவது பிரச்சனையா?

அவளின் கோபமான வார்த்தைகளை கேட்டும் எதுவும் பேசாமல் தரையை பார்த்துக் கொண்டிருந்தாள் ருக்குமணி.

இதை கவனித்த காமராஜன் “ராஜேஸ்வரி இப்படி கோபமா பேசுனா அவ சங்கடபட மாட்டாளா? அன்பா கேளு” என்று மகளுக்கு ஆதரவாக பேசியவன்,

ருக்கு அப்பாகிட்ட சொல்லுமா மனசுக்குள்ள எதாவது பிரச்சனையா எதுவாயிருந்தாலும் அப்பாகிட்ட சொல்லு நீ டாக்டருக்கு படிக்கனுமுன்னு விரும்பினே. அதுனால் நீட் எக்ஸாம் சென்டருக்கு பயிற்சி வகுப்புல சேர்த்து விட்டேன். கேட்ட புக்ஸ் எல்லாம் வாங்கி கொடுத்தேன். நீ நல்லா தானே படிச்சிட்டு இருக்கே. அப்புறம் ஏன் ஒருவாரமா பேசமாட்டேங்கிற? நீட் எக்ஸாம் வேற வர்ற போகுது. இந்த நேரத்தில் இப்படி இருக்கலாமா? சொல்லுடா என்ன பிரச்சனை? மறுபடி மறுபடியும் தந்தையும் தாயும் கேள்வி மேல் கேள்வி கேட்டதால்.

ருக்குமணி எரிமலையாய் வெடித்தாள் “ஆமாம்பா எக்ஸாம் பிரச்சினை தான்! என்று போட்டுடைத்தாள் இருவரும் அதிர்ந்தனர். என்ன எக்ஸாம் பிரச்சினையா? என்னடி சொல்றே? நீ ஒழுங்கா தானே ஸ்டடி சென்டருக்கு போயிட்டு வர்றே. அப்புறம் ஏன் இப்படி பேசுறே” ராஜேஸ்வரி வழக்கம்போல் கோபமாக பேசினாள்.

ராஜேஸ்வரி இப்படி கோபமாக பேசாதேன்னு உன்கிட்ட சொன்னேனில்ல; அப்புறம் ஏன் பேசுற என்று மனைவியை அதட்டி விட்டு மகள் பக்கம் திரும்பினான்.

ருக்கு என்னடா சொல்ற உனக்கு எக்ஸாமுல என்ன பிரச்சனை?

நீட் எக்ஸாம் பிரச்சனை தான் பெரிய பிரச்சினையா இருக்கு

நீட் எக்ஸாமுல என்ன பிரச்சனை?

“என்னென்ன கேள்விவரும் கஷ்டமான கேள்விவருமா? நான் படிச்சத கேட்பாங்களா? இல்ல சம்பந்தமில்லமா வேறொரு பாடத்தில வர்றத கேட்பாங்களான்னு பயமா இருக்குப்பா. சி.பி.எஸ்.இ பாடத்திட்ட அடிப்படை முறைனால ஸ்டேட் அளவு எழுதுறது எப்படின்னு குழப்பமா இருக்கு” கண்களில் வழிந்தோடிய கண்ணீர்த் துளிகளை துடைத்துக்கொண்டு பேசினாள் ருக்குமணி.

இதைக் கேட்ட காமராஜன்

‘‘ இதுதான் உன் பிரச்சனையா ஆக நீட் தேர்வு பயம் தான் உனக்கு. இதுக்குப்போயி நீ கவலைபடலாமா? நல்ல வேலை இப்பயாவது சொன்னியே” என்று மகளிடம் பேசிய காமராஜன், மனைவியிடம், “ராஜேஸ்வரி குடிக்க செம்புல தண்ணீர் கொண்டு வா” என்றான், அவள் தண்ணீர் கொண்டு வந்தாள். தண்ணீர் செம்பை வாங்கி மடக் மடக்கென்று குடித்து செம்பை கீழே வைத்தான்.

அம்மா ருக்குமணி உன் பிரச்சனைக்கு நான் பதில் சொல்றேன் சொல்ற பதில அது இந்த பிரச்சனைக்கு முடிவாகும். அதுவரைக்கும் நீ அமைதியாயிருக்கனும் சரியா” காமராஜன் சொல்லவும் அவளும் சரிப்பா என்றாள்.

இப்ப அம்மாகிட்ட செம்புல தண்ணீர் வாங்கி குடிச்சது நீ பாத்தேல்ல ஆமாம் காலியான செம்பு கீழே வச்சேன். இப்ப இந்த செம்பவச்சி உதாரணமா ஒரு விசயம் சொல்வேன் கவனமா கேட்பாயா?

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை, நீட் தேர்வு பிரச்சினைக்கு செம்புக்கும் என்ன சம்பந்தம்?

அப்பா எனக்கு நீங்க சொல்றது ஒன்னும் புரியலப்பா என்றதும்

உனக்கு புரியிற மாதிரி சொல்றேன். இப்ப நான் குடிச்ச செம்புல என்ன இருந்தது?

தண்ணீர் இருந்தது

அந்தச் செம்புல தண்ணி இருந்ததுனால தண்ணீ இருந்ததுன்னு சொல்றே. அதில பாயாசம் இருந்தால் செம்புல பாயாசம் இருக்குதுன்னு சொல்லுவே சரியா

ஆமாம்

ஆக செம்புல என்ன இருக்கோ அதைதான் சொல்லமுடியும்; செம்புல தண்ணி இருந்தால் தண்ணி இருக்கும் பாயாசம் இருந்தால் பாயாசம் தானே இருக்கும். செம்ப ஒரு மனசுக்கு ஒப்பிட்டு பார் அந்த செம்புல என்ன இருக்கோ அதுதான் இருக்கும். அது மாதிரி நம்ம மனசுல என்ன இருக்கோ அதுதான் இருக்கும்.

இப்ப தெளிவா சொல்றேன். நம்ம மனசுக்குள்ள எந்த மாதிரி எண்ணங்கள நினைக்கிறோமோ… அதுதான் இருக்கும் நம்பிக்கை தைரியம் போன்ற எண்ணங்கள் மனசுக்குள் இருந்தால் அந்த எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி சூழ்நிலையும் உருவாகும். அதே நேரத்தில் தோல்வி கவலை சந்தேகம் பயம் போன்ற எண்ணங்கள் மனசுக்குள்ள இருந்தால் அதுக்கு தகுந்த மாதிரி சூழ்நிலையும் உருவாகும் ஆக உன் மனசும் அப்படித்தான்.

நீட் தேர்வு பயம். தேர்வு பற்றிய எதிர்மறையான எண்ணங்கள் தான் உன் மனசுக்குள்ள நிறைய இருக்கு. அதுக்கு பதிலா தேர்வுபற்றிய நம்பிக்கையான எண்ணங்கள் உன் மனசுல இருந்தா இப்படி நீட் தேர்வு பயம் இருக்காது. என்ன நான் சொல்றது புரியுதா? எனக்கேட்டான்.

அதற்கு அவள்.

கொஞ்சம் புரிஞ்சும் புரியாமலும் இருக்குப்பா என்றாள்.

இந்த அளவுக்கு புரிஞ்சாலே நீ உன்ன பத்தி முழுசா புரிஞ்சிக்குவே”

இப்ப நடைமுறைக்கு வருவோம். நீட் தேர்வுன்னா என்ன? அது ஒரு தகுதி தேர்வு டாக்டர் படிப்பு படிப்பதற்கு இந்த தேசிய தகுதித் தேர்வை எழுதி பாஸானால் டாக்டருக்கு படிக்கலாம்

இதற்கு அரசாங்கம் சில உதவிகளை மாணவர்களுக்கு செஞ்சிருக்கு. குறிப்பா உன்ன மாதிரி அரசுப்பள்ளியில் படித்தவர்களுக்கு ஏழை மாணவர் மாணவியர்க்கு மொத்தமுள்ள மருத்துவ சீட்டில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு செஞ்சிருக்காங்க. அதோட நீட் தேர்வுக்கு இலவசமா பயிற்சி சென்டரும் ஆரம்பிச்சிருக்காங்க. எத்தனையோ பேர்கள் படிச்சி நீட்தேர்வுல பாஸாயிருக்காங்க. வருசா வருசம் பாஸாகுறவங்க எண்ணிக்கை கூடிட்டுத்தான் இருக்கு. நீட் தேர்வு சென்டரில் திறமையான ஆசிரியர்களும் நல்லா சொல்லி கொடுக்குறாங்க. நாம்தான் கவனமாக படிக்கனும்; ஏதாவது சந்தேகம் வந்தா தைரியமா கேட்டுத் தெரிஞ்சிக்கனும்; அதுபோக தனியார் நீட் தேர்வு பயிற்சி சென்டர்கள் நிறைய இருக்கு. எல்லா பயிற்சி சென்டர்களையும் பயிற்சி கையேடுகள் மாதிரி வினா விடைகள்ன்னு கொடுத்து படிக்கச்சொல்றாங்க

அவங்க சொல்லித்தரும் பயிற்சிப்பாடங்களை ஆர்வமா கவனமா படிக்கிறது. நம்ம பொறுப்பு . ஏதாவது சந்தேகம் முன்னாலும் கேட்குறது நம்ம பொறுப்பு. கண்ணும் கருத்தா நாம தான் படிக்கனும். கொள்கையோட படிக்கனும்; வெறுமனன்னு படிக்கக்கூடாது அப்புறம் எக்ஸாம் நேரத்தில் விழுந்து விழுந்து படிக்கிறதைக் காட்டிலும் அன்னன்னைக்கு பாடங்களை உடனே படிச்சி மனசில பதிய வச்சுக்கனும். நாளைக்கு படிப்போம் நாளைக் கழிச்சு படிப்போமுன்னு அலட்சியமா இருக்கக்கூடாது.

அலட்சியமா இருந்தால் பரீட்ச்சை நேரத்தில் கஷ்டப்பட்டு படிக்க வேண்டியதுவரும். அவசரப்பட்டு படிக்க வேண்டியது வரும். அப்படி அவசரப்பட்டு படித்தால் மனதில் பதியாது. .நிதானமாக படிக்கனும் இலட்சிய தாகம் கொண்டு படிக்க வேண்டும். எப்படியாவது படித்து தேர்ச்சியாகி டாக்டராக வேண்டும் வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லபெயர் எடுக்கவேண்டும் என்ற வைராக்கியத்தோடு படிக்க வேண்டும்.

நீட் தேர்வுக்கு எந்தெந்த கேள்விவரும் வராது என்று ஆசிரியர்களிடம் பயமில்லாமல் கேட்டு தெளிவு பெற வேண்டும்.

வீட்டில் படிப்பைத் தவிர எந்த வேலையும் சொல்ல மாட்டாங்க . நமக்கு படிப்பு தான் வேலை; அந்தப் படிப்பை சரியான முறையில் படிக்க வேண்டும்; பெற்றவங்களோட கனவை நினைவாக்க வேண்டும்.

எல்லாத்துக்கும் மேலே தைரியமும் தன்னம்பிக்கையும் வேணும். கஷ்டம்ன்னு நினைச்சா அது கஷ்டமாகத் தெரியும். சுலபமா நினைச்சா சுலபம்தான். எல்லாமே நம்ம மனசில் இருக்கும்மா. நேர்மறையாக எப்போது நினைக்கனும்; எதிர்மறையாக எண்ணக்கூடாது; ஏன்னா எதை நம்புறோமோ அதையே நம்ம மனசு நம்பும். நீட் தேர்வுல ஜெயிக்கிற பிள்ளைகள் எல்லோரும் உன்னை மாதிரி பிள்ளைகள்தான் . அவங்க வானத்திலிருந்து குதிச்சவங்க இல்ல. அவங்கள மாதிரி நீயும் முயற்சி செஞ்சா வெற்றி பெறலாம்; முதல்ல உன்னோட தயக்கத்தையும் கூச்சத்தை விட்டு வெளியே வா. .ஆசிரியர்கள் கிட்டையும் உன் மாதிரி படிக்கிற மாணவியர் கிட்டையும் மனம் திறந்து பேசு. பாடங்கள் சம்மந்தப்பட்ட விஷயங்கள பகிர்ந்துக்கோ என்று காமராஜன் தெளிவான விளக்கத்துடன் பேசினான்.

காமராஜன் கூறிய ஒவ்வொரு அறிவுரையையும் கேட்ட மகள் ருக்மணி அப்பா நீங்க சொன்ன எல்லா விசியமும் புரிஞ்சது. நம்மால் முடியாதது எதுவும் இல்லை; பயிற்சியும் முயற்சியும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்பா. .னக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரித்துவிட்டது. இனிமேல் நான் கவலைபட மாட்டேன். நீட் தேர்வில் மாநில அளவில் வெல்வேன் என்று வீரமாக விவேகமாகப் பேசினாள்.

காமராஜனும் ராஜேஸ்வரியும் பூரித்துப்போயினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *