செய்திகள்

வெற்றி ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் குரூப்1 தேர்வில் சாதனை

Makkal Kural Official

சென்னை, மே 10–-

வெற்றி ஐ.ஏ.எஸ். அகாடமியில் குரூப் -1 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கவுன்சிலிங் மூலம் சப் கலெக்டர் மற்றும் டிஎஸ்பி பதவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்று அகாடமியின் இயக்குனர் சண்முகம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:–

தமிழ்நாடு தேர்வு கழகம் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 90 மாணவர்களுக்கு கவுன்சிலிங் மூலம் பணி நியமனம் செய்து ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டு வருகிறது. இதில் வெற்றி ஐ.ஏ.எஸ். கல்வி மையத்தில் படித்த 59 மாணவர்கள் பணி நியமன ஆர்டர் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

மொத்தம் உள்ள 16 சப் கலெக்டர் பதவிகளில் 11 பதவிகளை எங்கள் மைய மாணவர்கள் பிடித்துள்ளனர். 23 காவல்துறை துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) பதவிகளில் 15 பதவிகளையும் எங்கள் மாணவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் 7 பேர் ஊரக வளர்ச்சித் துறையில் உதவி இயக்குனர்களாகவும், 7 பேர் வணிகவரித்துறையில் உதவி கமிஷனர்களாகவும், 17 பேர் கூட்டுறவு துணை பதிவாளர்களாகவும், ஒருவர் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலராகவும், ஒருவர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலராகவும் பணி ஆணை பெற்றுள்ளனர்.

முதல் மாணவி கதிர்ச்செல்வி

குரூப்-1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த கடலுரைச் சேர்ந்த மாணவி கதிர்ச்செல்வி எங்கள் மாணவி ஆவார்.

தனது வெற்றி குறித்து கதிர்ச்செல்வி கூறுகையில், ‘கடின உழைப்பும், விடாமுயற்சியும், வெற்றி ஐஏஎஸ் கல்வி மையத்தில் தேர்வு தொடர்பு மற்றும் அவர்கள் தந்த பயிற்சி காரணம் எனக் கூறியுள்ளார்.

இவரின் தந்தை விவசாயி ஆவார். இவர் டிஎன்பிஎஸ்சி மெயின் தேர்வுக்கு எங்கள் மையத்தில் நடத்தப்பட்ட 50 மெயின் தேர்வுகளையும் எழுதி பயிற்சி பெற்றவர் ஆவார். இதேபோல ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஹரி பிரியங்கா மாநில அளவில் மூன்றாவது இடம் பிடித்து சப் கலெக்டராக தேர்வாகியுள்ளார். இவரும் வெற்றி அகாடமியின் மெயின் தேர்வு தொடரே தன் வெற்றிக்கு காரணம் எனக் கூறினார்.

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த காளீஸ்வரி மாநில அளவில் ஐந்தாம் இடம் பிடித்து சப் கலெக்டராக தேர்வாகி உள்ளார். இவர் முதல் நிலை முதன்மைத் தேர்வு நேர்முகத் தேர்வு மூன்றுமே வெற்றியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சண்முகம் கூறினார்.

புதிய பயிற்சி வகுப்புகள்

இயக்குனர் சண்முகம் மேலும் தெரிவிக்கையில் இந்த சாதனைப் பயணத்தின் தொடர்ச்சியாக குரூப் 1 குரூப் 2 தேர்வுகளுக்கான புதிய பயிற்சி இம்மாதம் 12 ந் தேதி முதல் தொடங்குகிறது. மாணவ மாணவிகளுக்கு தனித்தனி அறைகளுடன் உணவுடன் கூடிய விடுதி வசதியும் வழங்கப்படுகிறது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் 984432666மற்றும் 9884421666என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *