செய்திகள் நாடும் நடப்பும்

வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும் டிஜிட்டல் புரட்சி


ஆர். முத்துக்குமார்


இன்று உலகமே நமது டிஜிட்டல் வங்கி பரிவர்த்தனைகளின் வேகம், விவேகம் அதில் பொதிந்து இருக்கும் பாதுகாப்பு சமாச்சாரங்களை வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறது. இதன் பயனாக இன்டர்நெட் சேவைகள் துறை நமது பொருளாதாரத்தில் பெரும் பங்காற்றும் வல்லமை பெற்று வருகிறது.

தற்சமயம் நமது ஜிடிபியில் 4% அளவுக்கு தான் இன்டர்நெட் சேவைகளின் பங்கு இருக்கிறது. அது அடுத்த 5 ஆண்டுகளில் 12% அளவுக்கு அதாவது 3 மடங்கு அதிகரித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2000 துவங்கிய காலத்தில் நாம் மெல்ல இன்டர்நெட் தொழில்நுட்பங்களை கையாள பழகினோம். அடுத்த 20 ஆண்டுகளில் பல புதுப்புது சேவைகள், இன்டர்நெட் கொண்டு இயங்கும் கருவிகள் என பலவற்றை வடிவமைக்கவும் பயனுள்ள உபயோக கருவிகளாக உயர்த்தினோம்.

ஆனால் சாலைஓர பிளாட்பாரக் கடைக்காரர்கள் முதல் சொகுசு கார்கள் வாங்குவது வரை இன்டர்நெட் சேவையின் உதவியால் பணப் பரிமாற்றம் நம் வாழ்வில் முக்கிய அங்கமாகி விட்டது.

இதுவரை வருமானம் தரும் தொழில் துறையாக இல்லாது, சேவைகளை குறைந்த விலையில் தருவதல் முனைப்புடன் இருந்தோம். இனி வரும் நாட்களில் அதாவது 2030க்குள் தனிநபர் வருமானத்தில் இன்டர்நெட் நேரடி வருவாய் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புரட்சியில் சாமானியனுக்கும் பல நன்மைகள் காத்திருக்கிறது.

* டிஜிட்டல் சேவைகள் கிராமங்களிலும் கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது.

* டிஜிட்டல் புரட்சியின் பிரதிபலிப்பாக அரசு நலத்திட்டங்கள் பயனாளிகளை உரிய நேரத்தில் உரிய நபரிடம் சென்றடைந்தும் விடுகிறது.

அடுத்து வருவது ஒவ்வொருவரின் உரிமையாக டிஜிட்டல் சக்தி உயர்ந்து விடும். முன்பு வாகன உரிமம் பெற கியூ வரிசையில் காத்திருந்தது மாறி ஆன்லைனில் விண்ணப்பித்து, வேண்டிய நாளில், குறிப்பிட்ட மணி நேரத்தில் நேர்காணலுக்குச் சென்றுவிடும் நிலை நாடெங்கும் வந்து விட்டது.

தற்போது தனிநபர் ஆதார விவகாரங்களைத்தான் முழுமையாக டிஜிட்டல் முறையில் இல்லை! பாஸ்போர்டையும் வங்கி கணக்கையும் டிஜிட்டல் விண்ணப்பத்தில் பெற முற்பட்டாலும் அடையாள அட்டைகளை ஸ்கேன் செய்து தானே பதிவேற்றம் செய்தாக வேண்டும்!

ஆனால் அதுவும் மாறி விடப்போகிறது. அதற்கான அச்சாரமே சென்ற மாத இறுதியில் மக்களவையில் தாக்கப்பட்ட ‘பிறப்பு மற்றும் இறப்பு’ பதிவுத் திருத்த மசோதார 2023.

இனி பிறக்கும் குழந்தைகளுக்கு டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை தந்து விடும். படிப்பு, வாகன ஓட்டஉரிமை, அரசு பணியில் சேருவது, அரசு சேவைகளை பெறுவது, பாஸ்போர்ட், ஆதார் முதலியவற்றை வாங்குவது, திருமணம் பதிவு போன்ற எல்லா அரசு சேவைகளுக்கும் இந்த டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் பயன் தரும்.

பிறப்பு-–இறப்புக்களின் டிஜிட்டல் பதிவு முறைக்கும் சான்றிதழ்களை மின்னணு மூலம் பெற்றுக் கொள்வதற்கும் இந்த மசோதா வழி வகுக்கிறது. தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், பெற்றோரை இழந்த அல்லது பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், வாடகை தாய் மூலம் பிறக்கும் குழந்தைகள், ஒன்றைப் பெற்றோர் அல்லது திருமணம் ஆகாத பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆகியோரின் பிறப்பை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் சட்டத்தில் சேர்க்கப்பட இருக்கின்றன. மசோதா சட்டமாகிவிட்ட பிறகு பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் இந்த புதிய விதிகள் பொருந்தும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் மக்கள் அரசிடமிருந்து ஆவணங்களை பெறும் நடைமுறை படிப்படியாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதிக எண்ணிக்கையிலான சான்றுகளைத் தர வேண்டிய நிலை உள்ளிட்ட நடைமுறை சிக்கல்களும் காலதாமதமும் பெரிதாக குறைந்து விட்டதாக சொல்லி விட முடியாது. அதோடு ஆவணங்களில் எழுத்துப்பிழையோ தகவல் பிழையோ இருந்தால் அதை திருத்துவதற்கான நடைமுறைகள் இன்னொரு ஆவணத்தை பெறுவதற்குரிய உழைப்பை கூறுகின்றன. இந்த பின்னணியில் ஒருவர் பிறந்த தேதி, இடம் இரண்டுக்கும் வெவ்வேறு சான்றுகள் தர வேண்டி இருப்பதை தவிர்ப்பதற்காக இந்த டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படுவதும் அதைப் பிற ஆவணங்களைப் பெறுவதற்கான சான்றாக பயன்படுத்த முடியும் என்பதும் மக்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

மையப்படுத்தப்பட்ட பதிவேட்டில் இருந்து வழங்கப்படும் டிஜிட்டல் வடிவிலான பிறப்புச் சான்றிதழ்களை, பிற அரசு ஆவணங்கள், சேவைகளை பெறுவதற்கான சான்றுகளாக அனைத்து மாநில அரசுகளும் உள்ளாட்சி அமைப்புகளும் ஏற்றுக் கொள்வதையும் மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

டிஜிட்டல் புரட்சியில் நாம் கடந்த 30 ஆண்டுகளாக சாதித்துக் கொண்டு தான் இருக்கிறோம். தற்சமயம் நம்மிடம் தவழ ஆரம்பித்துள்ள செயற்கை நுண்ணறிவு நமது டிஜிட்டல் வாழ்க்கையை மேலும் அதிவேக வளர்ச்சிகளுக்கு வழி வகுக்கும்.

இத்தருணத்தில் சாமானியனின் ஆவணச் சுமையை முற்றிலும் குறைக்க எடுக்கப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்களை நாடே பாராட்டி வரவேற்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *