செய்திகள் வாழ்வியல்

வெந்தயக் கீரையை சமைத்துச் சாப்பிட்டால் பசியின்மை, ருசியின்மை குணமாகும்

Makkal Kural Official

நல்வாழ்வுச் சிந்தனைகள்


வெந்தயக் கீரை சமைத்துச் சாப்பிட்டால் பார்வைக் கோளாறுகளைச் சரி செய்கின்றது.

இது சீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது.

இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது. வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் குடல் புண்களும் குணமாகின்றன. மலம் சுத்தமாகும். உடல் சுத்தமாகும். மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் வெந்தயக்கீரை குணப்படுத்துகின்றது.

வெந்தயக் கீரையை வெண்ணெய்யிட்டு வதக்கி உண்டால் பித்தக்கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பிசம், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும். உட்சூடும் வறட்டு இருமலும் கட்டுப்படும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *