நல்வாழ்வுச் சிந்தனைகள்
வெந்தயக் கீரை ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்ட உணவாகும். இதை அரைத்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் தொண்டைப்புண், வாய்ப்புண் , குடற்புண் ஆகியவை ஆறும்.
இடுப்பு வலி நீங்கும். வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வெந்தயக் கீரைக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையையும் சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குறைக்கும் ஆற்றல் உள்ளது. இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.