சிறுகதை

வெட்டிப்பயக | ராஜா செல்லமுத்து

ராஜ், நண்பர்களைக் கூட்டிவைத்துக்கொண்டு அரட்டையடித்துக் கொண்டிருந்தான். அவன் பேச்சில் பொருளும் இருக்காது ;அர்த்தமும் இருக்காது. ஆனால் வழவழவென்று பேச்சு வந்து கொண்டே தானிருக்கும்.

“அப்புறம் …. இன்னைக்கு என்ன வேலை? ”

” ஒண்ணுல்ல, சும்மாதான்,

“ம்ம்” நம்ம கர்ணன் எப்படி?

” எப்படின்னா?”

” அவன் ஆளு ஒரு மாதிரியா இருக்கானாமே’’

” தெரியலையே ”

” ஆமாய்யா ஊருக்குள்ள சொல்லிகிட்டாங்க. அவன் ஒரு மாதிரிங்க’’,

“ஆமாமா”

” இப்ப தான் நல்லவன் இல்லன்னு சொன்ன”

” சொன்னாங்க ; சொன்னேன் ; அவ்வளவுதான்.

“ம்” இந்தா பாண்டி எப்படி?

அவன் ஒரு மாதிரியான ஆளுங்க

“ம்”

நம்ம சந்தோஷ் எப்படி?

“அவன் ஒரு மாதிரிங்க. இப்படி ஊர் பொரணி முதல் உள்வீட்டுப் பொரணி வரை பேசிக் கொண்டிருந்தனர்.

என்ன ராஜ் வேலைக்கு போகலையா?

“இல்லையே”

ஏன்?

ஏன்னா எவனும் சரியில்லீங்க. நம்ம டெம்பர்மெண்டுக்கு எவனும் ஒத்து வர மாட்டான். அதான் நான் ஒதுங்கியே தான் வாழ்ந்துட்டு இருக்கேன். ஏன்னா நம்ம அறிவ ஓட்டுனவன் எவனும் இங்க இல்ல. அதான் எட்டியே நின்னுட்டு இருக்ககேன் என்று சவடால் பேச்சை அவிழ்த்துவிட்டான் ராஜ் .

அவன் பேச்சில் எகத்தாளம் மிகுந்திருந்தது.

அவனைச்சுற்றி வெட்டி வேலை பார்க்கும் கூட்டம் சூழ்ந்து கொண்டிருந்தனர்.

இந்த கர்ணன் இருக்கானே

ஆமா,

அவனைத்தான் அப்பவே பேசிட்டம என்று இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பேசிக்கொண்டிருக்கும் போது கர்ணன் வந்து சேர்ந்தார்.

“வா வா வா கர்ணா வா எப்படி இருக்க?

இருக்கேன் கர்ணன் வந்ததும் கர்ணனை விட்டு விட்டு மற்ற நண்பர்களை விட்டு விளாசிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் நல்லவர்களைக் கூட நார் நாராகக் கிழித்துப் போட்டனர். மதிய நேரம் சாப்பாட்டு டைமைத்தாண்டி உருண்டு போய்க்கொண்டு இருந்தது.

ராஜின் சொந்தம் நேரம் அறைத்தோழன் குரலில் பேசுவார்கள் என்று யாரும் கேட்காத கருணையுடன் கேட்டான்.

என்ன இவ்வளவு நேரம் ஆச்சு. சாப்பிடாமல் இருக்கிங்க?

கர்ணனுடன் இருந்த ஆட்கலெல்லாம்,

நான் சாப்பிட்டுட்டு தான் வந்தேன். எனக்கு சாப்பாடு வேண்டாம். நான் சாயங்காலம் தான் சாப்பிடுவேன் இப்படி பேசியபடியே ஒதுங்கினர்.

கர்ணா வா போகலாம்

எங்கே?

சாப்பிட,

இல்ல நான் சாப்பிட்டுட்டு தான் வந்தேன்

இல்ல வா”

நான் வரலீங்க . சாப்பிட்டுட்டு தான் வந்தோம்.

அப்படின்னா சில்லறை குடு”

“சில்லறையா?

ஆமா சாப்பிடணும்னுமில்ல வெயிலா இருக்கு.

நீங்க போயிட்டு வாங்க .

‘‘கையில வேற காசுல்ல. ஏடிஎம்ல தான் எடுக்கனும்’’

வா வந்து எடுத்துக்குடு

சாப்பிட்டியான்னு கேட்டது தப்பாடா என்று முணங்கிய வாறே ராஜூவுடன் சென்றான் கர்ணன்.

வீதி வழி வரும் போதும் மற்றவர்களை குறை சொல்லத் தவறவில்லை. வீதிவழியே வரும்போது நீங்க போய் சாப்பிட்டுட்டு இருங்க. நாங்க ஏடிஎம் போயிட்டு வாரோம் என்று கர்ணன் ராஜூவின் இன்னொரு நண்பனையும் கூட்டிக்கொண்டு ஏடிஎம் சென்று வந்தான். ஒரு அசைவ ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தான் ராஜ்

டேய் சாப்பிடுன்னு சொன்னா என்ன ஏதுன்னு கேக்காமா நீ சாப்பிடுவியா என் கையில காசு இல்லனா என்ன பண்ணுவ. இது தான் திண்ணையில இடம் குடுத்தா வீட்டையே பிடிக்கிற கதையா? அவன் லெக்பீஸைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அதற்கான பில்லைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தான் கண்ணன்.

ராஜூவின் நண்பனும் வடையும் டீயும் சாப்பிட்டு ஏவ் என ஏப்பம் விட்டான்.

காசு கொடுக்கும் நேரம் இந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

ராஜூ தான் இப்படின்னா அவன் கூட இருக்கிறவன் எல்லாருமே டுபாக்கூரா? அவனுக்கும் சேர்த்து பில் கொடுத்த கர்ணன் இனிமேல் இவனுக சாவகாசமே வேணாம் என்ற முடிவில் இருந்த போது

ராஜூவும் ஏவ் என ஏப்பம் விட்டு கர்ணனிடம் வந்தான்.

“எவ்வளவு பிரியாணி?

“நூறு”

“அவ்வளவு ஒர்த் இல்ல என்று மீண்டும் ஏவ் என ஏப்பம் விட்டான்.

அடப்பாவி இவ்வளவு நேரம் பட்டினியாய் இருந்திட்டு சாப்பாடு வாங்கிக் குடுக்கிறவன பார்த்து ஒரு தேங்ஸ் கூட சொல்லாதவன்”

பிரியாணி நல்லா இல்லையாம் வெட்டிப்பய” என்று நினைத்த கர்ணன் அவர்களிடமிருந்து விடைபெறும் போது ஓ.கே என்று பலமாகக் கையைக் காட்டினான் ராஜ்.

அவன் அப்படி நகர்ந்ததும் இந்த கர்ணன் ஒரு மாதிரியான ஆள்ல்ல என்று ராஜ் பேச …

ஆமாமா அவன் ஒரு மாதிரியான ஆள் தான் என்று பேச ஆரம்பித்தான் ராஜ்…. அதற்கு ஆமா சாமி போட்டு கொண்டிருந்தான் இன்னொருவன்.

பணத்தையும் இழந்து விட்டு கெளரவத்தையும் இழந்தபடியே நடந்து கொண்டிருந்தான் கர்ணன்.

“வெட்டிப்பயகளுக்கு ஒருமுறை வரும் வழக்கம் தான் கடைசி வரைக்கும் கூட வரும்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *