சென்னை, நவ 1–
வீல்ஸ் இந்தியா நிறுவனம், செப்டம்பர் 30ந் தேதியுடன் முடிவடைந்த 2ம் காலாண்டில் நிகர லாபத்தில் 26.69% அதிகரித்து ரூ.28 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.22 கோடியாக இருந்தது. இதேபோல வருவாய் 8.63% அதிகரித்து ரூ.1179 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.1085 கோடியாக இருந்தது.
உலகளாவிய சூழ்நிலையில் நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும் நிறுவனம், ரூ.299 கோடி ஏற்றுமதி வருவாயைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 15.6% வளர்ச்சியாகும். அரையாண்டில், நிகர லாபம்14.6% அதிகரித்து ரூ. 54 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் ரூ. 47 கோடி.
செப்டம்பர் 30ந் தேதியோடு முடிவடைந்த முதல் பாதியில் வருவாய் 8.85% அதிகரித்து ரூ. 2366 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு ரூ. 2174 கோடி.
செயல்திறன் குறித்து வீல்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீவத்ஸ் ராம் கூறுகையில், “ஏர் சஸ்பென்ஷன் மற்றும் டிராக்டர் சக்கரங்களில் வலுவான தேவை வளர்ச்சி உள்நாட்டுப் பிரிவின் வளர்ச்சிக்கு உந்துதலாக இருந்தது, அதே நேரத்தில் ஏற்றுமதிகள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டன” என்றார்.
இரண்டாம் காலாண்டில் தென் கொரியாவின் ‘SHPAC’ உடன் ஒரு மூலோபாய கூட்டணியில் நுழைந்தது, இதில் ஹைட்ராலிக் சிலிண்டர் வணிகத்திற்கான தொழில்நுட்ப உதவி மற்றும் கூட்டு வணிக மேம்பாடு ஆகியவை அடங்கும்.
![]()





