சென்னை ஜன. 28–
வீல்ஸ் இந்தியாவின் லாபம் கடந்த ஆண்டு (2024) டிசம்பர் 31ந் தேதியுடன் முடிவடைந்த 3வது காலாண்டில் ரூ. 22.57 கோடியை எட்டியது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ. 12.58 கோடியாக இருந்தது.
கடந்த ஆண்டு (2024) டிசம்பர் 31ந் தேதியுடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில், வீல்ஸ் இந்தியா லாபம் ரூ. 69.86 கோடியை எட்டியது. வீல்ஸ் இந்தியாவின் வருவாய் டிசம்பர் 31, 2024 முடிவடைந்த 3வது காலாண்டில் ரூ.1,058 கோடியை எட்டியது. டிசம்பர் 31, 2023 முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ1,131 கோடியாக இருந்தது. டிசம்பர் 31, 2024 முடிவடைந்த ஒன்பது மாதங்களில், வீல்ஸ் இந்தியா வருவாய் ரூ. 3230 கோடியை எட்டியது.
வீல்ஸ் இந்தியா நிர்வாக இயக்குனர் ஸ்ரீவத்ஸ் ராம் கூறுகையில்,
‘‘3–வது காலாண்டில் வலுவான லாப வளர்ச்சியின் அடிப்படையில், குறைந்த மூலப்பொருட்கள் விலைகள், சாதகமான தயாரிப்பு முறை மற்றும் உற்பத்தித்திறன் மற்றும் செலவு மேம்பாடுகள் ஆகியவற்றால் நாங்கள் தொடர்ந்து பயனடைகிறோம்”, என்றார்.
‘‘4 –வது காலாண்டில் கமர்சியல் வாகன பிரிவில் உள்நாட்டு தேவை மேம்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். கட்டுமான பணி வாகன வீல்கள் தயாரிப்பு வரம்புகளின் சுழற்சி காரணமாக இந்த ஆண்டு எங்கள் ஏற்றுமதி சரிந்துள்ள நிலையில், புதிய தயாரிப்பு திட்டங்கள் மூலம் வரும் ஆண்டில் எங்கள் ஏற்றுமதியை அதிகரிக்க நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
இடைக்கால ஈவுத் தொகைரூ. 4.50 பங்கு ஒன்றுக்கு என்று அறிவித்தது.
வீல்ஸ் இந்தியா டிரக்குகள், விவசாய டிராக்டர்கள், பயணிகள் வாகனங்கள் மற்றும் கட்டுமான உபகரணங்களுக்கான சக்கரங்களை தயாரிப்பதில் முன்னணியில் உள்ளது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் உற்பத்தி ஆலைகளுடன் கூடிய டிரக்குகள் மற்றும் பேருந்துகளுக்கான ஏர் சஸ்பென்ஷன் அமைப்புகள் மற்றும் கட்டுமான மற்றும் காற்றாலை தொழிலுக்கான கருவிகள் தயாரிக்கிறது என்றார்.