சிறுகதை பாண்டிய கட்டபொம்மன்

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்காக பாஞ்சாலங்குறிச்சி வந்த நடிகர் சிவாஜி

Makkal Kural Official

கட்டபொம்மன் – 8

வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரம், ஆட்சி முறை எவ்வாறு இருக்கும் என்று, காட்சிப்படுத்தியது சிவாஜி நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் படம். எங்களிடம் அனுமதி வாங்கிய பின்னரே அந்த படம் எடுக்கப்பட்டது.

எங்களது தாத்தா சுப்ரமணியதுரையிடம், மாபொசி, சிவாஜி கணேசன், சக்தி கிருஷ்ணசாமி ஆகியோர் வந்து அனுமதி வாங்கிய பின்னரே அந்த படத்தை எடுத்தனர். ஆனால் படம் வெளியான போது எனது தாத்தா உயிரோடு இல்லை. அப்போது நாங்கள் செக்காரக்குடியில் தான் வசித்து வந்தோம்.

வீரபாண்டிய கட்டபொம்மன் குடும்பத்தார், வீட்டுக்காவலில் இருந்து விடுபட்டவுடன், செக்காரக்குடியில் தான் குடியேறினர்.

1959-ம் ஆண்டு மே மாதம் 16-ம் தேதி வெளியானது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடித்ததில் சிவாஜிக்கு பேரும் புகழும் கிடைத்தது.

கயத்தாறில் சிலை நிறுவிய சிவாஜி

25 வாரம் ஓடி வெள்ளிவிழா கண்டது. ஆப்ரோ ஆசிய திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான சர்வதேச திரைப்பட விருதினை வென்றெடுத்த முதல் தமிழ் திரைப்படம் என்ற அந்தஸ்தை பெற்றது. சிறந்த நடிகருக்கான விருதினை சிவாஜிகணேசனுக்கு பெற்று தந்தது.

வீரபாண்டிய கட்டபொம்மன் மீது கொண்ட பற்றினால், கயத்தாறில் அவரை தூக்கலிட்ட இடத்தை, விலைகொடுத்து வாங்கினார் சிவாஜி. அங்கு கட்டபொம்மனுக்கு ஒரு சிலையையும் நிறுவினார்.

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தினை பொதுமக்கள் கடந்து செல்லும்போது, அடையாளத்திற்காக ஒரு கல்லினை அங்கு வீசி செல்வதை வழக்கமாக வைத்து இருந்திருக்கிறார்கள்.

அந்த இடம் கற்குவியலாக இருந்துள்ளது. இதனை அடையாளமாக வைத்து தான், நடிகர் சிவாஜி அந்த இடத்திலிருந்த கற்குவியலை அகற்றி, அங்கயே கட்டபொம்மனுக்கு பிரமாண்ட சிலை நிறுவினார்.

1970ல் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த சிலை திறப்பு விழாவுக்காக, சிவாஜியின் செக்ரட்டரி குருமூர்த்தி, கட்டபொம்மனின் வாரிசுகளை தேடிபிடித்து எங்கள் அய்யா (அப்பா), எங்களது சித்தப்பா ஆகியோரை அழைத்து சென்று கவுரவப்படுத்தினார்.

அந்த விழாவில், ஜனாதிபதி நீலம் சஞ்சிவரெட்டி, கர்மவீரர் காமராஜர், வீரபாண்டிய கட்டபொம்மனில் நடித்த சிவாஜி, ஜெமினி, பத்மினி கலந்து கொண்டார்கள்.

சாவித்திரியும் இதில் கலந்து கொண்டார். விழாவில், எங்களது அய்யா, சித்தப்பா ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி ஆளுயரத்துக்கு ரோஜாமாலை அணிவித்து கவுரவப்படுத்தினார். அப்போது நான் 6ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அந்த மாலையை அடிக்கடி அணிந்து பார்த்து மகிழ்வேன்.

படம் எண் 15சி1 – செய்தி தொடக்கத்தில் வைக்கலாம்

படம் எண் – 15சி2 – கயத்தாறில் சிவாஜி நிறுவிய சிலை நடுவில்

படம் எண் 15சி3 – வீரபாண்டிய கட்டபொம்மன் படம் எடுப்பதற்காக நடிகர் சிவாஜி கணேசன், இயக்குனர் சக்தி கிருஷ்ணசாமி, மாபொசி உள்ளிட்ட படக்குழுவினர், வீரபாண்டிய கட்டபொம்மனின் மகன் கம்பெனி செல்வத்தின் இரண்டாவது பேரன் டி.சுப்ரமணியத்துரையை பாஞ்சாலங்குறிச்சிக்கு நேரில் வந்து சந்தித்து பேசியபோது எடுத்த படம். கையில் கம்பு வைத்திருப்பவர் தான் டி.சுப்ரமணியத்துரை.

(படம் மூன்று காலம் ரைட் சைடு கீழ்)

––––––––––––

வழக்கம் போல் ராஜமல்லம்மாள் படம்

தலைப்பின் அருகில் கட்டபெொம்மன் ஒரிஜினல் படம்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *