வர்த்தகம்

வீட்டு மனைக்கு வசூலிக்கும் வரியை, அந்த பகுதியில் சாலை, குடிநீர் வசதிக்கு பயன்படுத்த தமிழக அரசு உத்தரவு

ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தலைவர் ஆ.ஹென்றி தமிழக அரசுக்கு நன்றி

சென்னை, பிப்.21

வீட்டு மனை வரியை வசூலிக்கும் உள்ளாட்சி துறை அந்த தொகையை அந்த பகுதியில் குடிநீர், கழிவு நீர், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்ற தங்கள் அமைப்பு கோரிக்கையை பரிவுடன் ஏற்று, அரசு உத்தரவாக வெளியட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசின் துணை முதல்வரும், நகர்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பு தேசிய தலைவர் ஆ.ஹென்றி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆ.ஹென்றி பேசுகையில், மனை வரன்முறை சட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெறும் வீட்டு மனைகள் மற்றும் மனைப் பிரிவுகளுக்கு, வசூலிக்கப்படும் வளர்ச்சி கட்டணத்தை கொண்டு, அந்தந்த வீட்டு மனைப் பிரிவில் உள்ள சாலைகள் குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி துறையே செய்து கொடுக்க வேண்டும் என எங்கள் கூட்டமைப்பு தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வலியுறுத்தி வந்தது என்று தெரிவித்தார்.

இதனை கருத்தில் கொண்டு, மக்கள் நலன் கருதி இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை நிலை எண்: 36/2021 ஆக வெளியிட்டு, தகுந்த தீர்வினை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கிராமப்புறங்களில் சாதாரண சாமானிய மக்களின் இல்லக் கனவுகளை நினைவாக்கும் வகையில், வீட்டுமனை அபிவிருத்தியாளர்கள் ஏற்படுத்திடும் வழக்கமான வீட்டு மனைப் பிரிவுகளுக்கும் மேற்கண்ட அடிப்படை வசதிகளை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளார்.

அரசின் இந்த உத்தரவினை அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் – தேசியத்தலைவர் ஆ.ஹென்றி மனம் திறந்து பாராட்டி வரவேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வரும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *