செய்திகள்

வீட்டில் ஆண்களும் சலவை செய்வதை வலியுறுத்தும் ஏரியல் சலவை பவுடர் நிறுவன திட்டம்: நடிகை நிக்கில் கல்ராணி துவக்கினார்

சென்னை, ஜூன் 5–

‘ஹலோ இங்கிலீஷ்’ செயலி மற்றும் ஏரியல் ஆகியன இணைந்து பாலின பேதத்தை தவிர்க்கும் பிரசாரத்தை நடிகை நிக்கிகல்ராணி துவக்கி வைத்தார்.

ஏரியல் – முன்னணி சலவை பவுடர் நிறுவனம் ஆங்கிலம் கற்பிக்கும் ஹலோ இங்கிலீஷ் நிறுவனத்துடன் இணைந்து வாழ்க்கைக்கு அடிப்படை அவசியமான திறமைகளை கற்றுத்தரவும் இதன் மூலம் இந்திய குடும்பங்களில் நிலவும் பாலின பேதத்தை தவிர்க்கவும் முயற்சி செய்துள்ளது. இதற்காக ஏரியல் நிறுவனம் சமீபகாலமாக புதிய பிரசாரமாக Sons#Share TheLoad எனும் வாசகத்தை தனது டிடர்ஜென்ட் பிராண்ட் வாயிலாக மேற்கொண்டுள்ளது.

மாணவர்கள் மத்தியில் துணி துவைப்பதும், சமைப்பதும் பெண்களுக்கான வேலை மட்டுமல்ல என்ற புரிதலை உணர்த்திவருகிறது.

#ShareTheLoad மூலம் சமூகத்தின் புரிதலை உணர்த்துவது முக்கிய நோக்கம். ஹலோ இங்கிலீஷ் செயலியானது இளம் மாணவர்களுக்கு மட்டுமல்ல இது இல்லத்தரசிகளுக்கும், தாய்மார்களுக்கும், இளம் தொழில் முறையினருக்கும் மிகவும் உபயோகமானது. இந்த செயலியின் கற்பித்தல் பாணியின் மூலம் புதிய முறையிலான கற்பித்தல் முறையை பின்பற்றுகிறது. இந்த கற்பித்தல் முறை மூலம் இந்திய வீடுகளில் பாலின பேதத்தை முற்றிலுமாக போக்குவதே நோக்கமாகும்.

ஹலோ இங்கிலீஷ் செயலியானது ஆங்கிலத்தை இந்தியாவில் உள்ள 12 மொழிகளின் வாயிலாகக் கற்றுத் தருகிறது. இந்தி, தமிழ், பெங்காலி மற்றும் பஞ்சாபி உள்ளிட்ட மொழிகள் மூலம் ஆங்கிலம் கற்கலாம். வழக்கமான ஆங்கிலம் கற்பித்தல் பாணியில் ஆடியோ பாடங்கள், விளையாட்டு, செய்தி அடிப்படையிலான க்விஸ் உள்ளிட்ட மூலமாக கற்பிக்கப்படுகிறது.

ஹலோ இங்கிலீஷ் செயலி அர்விந்த்குமார் பேசுகையில், முக்கியமாக குடும்ப உறுப்பினர்கள் தங்களது குடும்ப பொறுப்புகளை பகிர்ந்தளிப்பதில் தான் அடங்கியிருக்கிறது. ஹலோ இங்கிலீஷ் செயலியானது அனைத்து நகரமக்களுக்கு கற்பித்தல் முறையை மிகவும் எளிமையாக்கியுள்ளது. துணி துவைப்பது என்ற பாலினம் சார்ந்த பணியை அலுவலகத்தைப் போல வீடுகளிலும் இரு பாலரும் செய்யலாம் என்ற முயற்சியை ஏரியல் வெகுநேர்த்தியாக மேற்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *