வாழ்வியல்

வீட்டிலேயே நோய்களைப் போக்கிக் கொள்ளும் நாட்டு மருத்துவ முறை

வீட்டிலேயே நோய்களைப் போக்கிக் கொள்ளும் பெருமை மிக்கு நாட்டு மருத்துவ முறை. இதன் எளிமையையும் வலிமையையும் உலகமே பாராட்டுகிறது.

நாட்டு மருத்துவமும் ஆங்கிலேயர் கருத்தும் பின்வருமாறு:–

நாட்டுப்புற மருத்துவம் நாட்டுப்புறவியலைப் போல விவசாயிகளின் பண்பாட்டிலிருந்து தோன்றியதாக, டான் யாடர் (DON YODER) நாட்டுப்புற மருத்துவம் என்பது மக்களிடம் காணப்படும் நோய் தீர்க்கும் முறைகளில் அறிவியல் மருத்துவம் முறைக்கு மாறுபட்டது (FORMAL SYSTEM OF SCIENTIFIC MEDICINE) என்றார்.

உலகில் எங்கு நீங்கள் நோய் வாய்ப்பட்டாலும் நோயைத் தீர்க்க அங்கு இயற்கை மருந்துகள் இருப்பதைப் பார்ப்பீர்கள் என்றார் அமெரிக்க டாக்டர் ஜார்வின் தமது நாட்டுப்புற மருத்துவம் என்னும் நூலில் கூறியுள்ளார்.

“தலைமுறை தலைமுறையாகத் தெரிந்து கொண்ட அனுபவத்தின் உதவியோடு எளிய முறைகளில் வீட்டிலேயே நோய்களைப் போக்கிக் கொள்ளும் மருத்துவ முறையே நாட்டு மருத்துவம் என்கிறது ஸ்டெட்மேன் மருத்துவ அகராதி”

ஒவ்வொருவா் வீட்டிலும் பழக்கமான நாட்டு மருத்துவ முறைகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது; பாதுகாப்பானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *