செய்திகள்

வீட்டிலேயே… திருமணம்!

Spread the love

சென்னை, மார்ச் 26–

உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் காரணமாக தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். 21 நாட்களுக்கு வீட்டில் விழித்திரு, தனித்திரு, விலகி இரு… என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வேண்டுகோளை அடுத்து அரசின் உத்தரவை தொடர்ந்து மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள்.

இதற்கிடையில் இம்மாதம் திருமணத்தை வைத்திருக்கும் குடும்பத்தினர், இந்தத் தடை உத்தரவு காரணமாக வெளியே வரமுடியாது திருமணத்தை நடத்த முடியாது என்பதில் மிகவும் கலங்கிப் போய் குழப்பம் அடைந்து இருக்கிறார்கள். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் திட்டமிட்டு தேதி குறித்த திருமணத்தை நடத்துவதை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

இவர்களில் சிலரோ, நல்ல நாள் பார்த்து தேதி குறித்து முடிவு செய்யப்பட்ட திருமணத்தை நிறுத்த வேண்டாம் என்ற முடிவில் நடத்தவும் துவங்கியிருக்கிறார்கள். இதில் சென்னையில் இன்றைக்கு ஒரு குடும்பம் திட்டமிட்டபடியே முகூர்த்த நேரத்தில் வீட்டிலேயே திருமணத்தை நடத்தி இருக்கிறார்கள். அதிகக் கூட்டம் கூடக்கூடாது என்ற கண்டிப்பான கெடுபிடி உத்தரவு காரணமாக மணமகன் – மணமகள் வீட்டாரில் மிக மிக நெருங்கிய சொந்தம் மட்டுமே பங்கேற்று இந்த திருமணம் நடந்திருக்கிறது. புரோகிதர்கள் வேத மந்திரங்களை ஓதி, சம்பிரதாயப்படி திருமணத்தை நடத்தி வைத்து இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *