செய்திகள்

வீட்டிலும் மாஸ்க் அணியுங்கள்: மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி, ஏப். 27–

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் வீடுகளிலும் மாஸ்க் அணிந்து கொள்ளவும், விருந்தினரை வீட்டுக்கு அழைக்காமல் இருக்கவும் நிதி ஆயோக் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஒரு நாள் பாதிப்பு, 3 லட்சத்தை கடந்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் முழு நேர, பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுவெளியில் மாஸ்க் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாஸ்க் அணியாவிட்டால் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மக்கள் வீடுகளில் இருந்தாலும் மாஸ்க் அணிய வேண்டும் என நிதி ஆயோக் அறிவுறுத்தியுள்ளது. வீடுகளில் உள்ளவர்களுக்கு கொரோனா இருந்தும் அறிகுறிகள் தெரியாமல் இருந்தால் அது மற்றவர்களுக்கும் பரவ கூடும் என்பதால் முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. மேலும் விருந்தினர்கள் உள்ளிட்ட யாரையும் வீட்டுக்கு அழைக்காமல் இருப்பது நல்லது என்றும் அறிவுறுத்தி உள்ளது.

தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் செல்ல, குடும்பத்தினரை அனுமதிக்காதீர்கள் என்று கூறியுள்ள நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், மாதவிடாய் காலமாக இருந்தாலும் பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றும், அதற்காக தடுப்பூசி போடுவதை தள்ளிப்போட வேண்டியதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *