செய்திகள்

வீடுகள், அலுவலகங்களுக்கு அதிக சக்தி ‘‘ஹாத்வே பிராட்பேண்ட்’’ அறிமுகம்

சென்னை, செப் 12–

இந்தியாவின் முன்னணி பிக்ஸ்டு லைன் பிராண்ட்பேண்ட் இணைய சேவை வழங்குனராகத் திகழும் ஹாத்வே கேபிள் அண்டு டேட்டாகாம், சென்னையில் அதன் மேம்படுத்தப்பட்ட சேவையை அறிமுகம் செய்துள்ளது. பிராட்பேண்ட் மற்றும் வயர்டு இணைய சந்தையில் இந்நிறுவனம் 300 MBPS வேகத்துடன் 2TB டேட்டாவை வழங்கவுள்ளது.

உள்ளடக்க பயன்பாடு நெட்ஃபிளிக்ஸ், சன்NXT, யப் டிவி அமேசான் பிரைம், வர்த்தக மற்றும் தகவல் தொடர்புகள், அதிகளவில் ஆன்லைனில் மேற்கொள்ளப்படுவது அதிகரித்திருப்பதனால், உயர் வேகம் மற்றும் நம்பத்தக்க சேவைகளுக்கான தேவைப்பாடு உயர்ந்து வருகிறது மற்றும் உலகளாவிய போக்குகளின்படி, அன்லிமிடெட் டேட்டா டவுன்லோடுகள் வயர் லைன் பைபர் பிராட்பேண்டிற்கு அதிக தேவைப்பாட்டினையும் உருவாக்கியுள்ளது. சென்னை நகரிலுள்ள பெரும்பாலான இயக்கர்கள் 50 GB டேட்டா அளவுகளை வழங்கி வரும் நிலையில், கட்டுப்படியாகும் விலையில், 300 MBPS வேகத்துடன் 2TB டேட்டாவை வழங்கும் ஹாத்வேயின் திட்டம், பயனர்களின் ஆன்லைன் அனுபவ அளவை மேலும் மேம்படுத்தவுள்ளது.

சென்னையில் இந்த ஹாத்வே சேவையை அறிவித்துப் பேசிய ஹாத்வே நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ராஜன் குப்தா பேசுகையில், ‘பிராட்பேண்ட் மற்றும் உள்ளடக்க பயன்பாட்டில் மிக வேகமாக வளர்ந்து சந்தைகளில் ஒன்றாக சென்னை திகழ்கிறது. இந்தியாவில் முதல் முறையாக, இச்சேவையை வழங்குவதில் ஹாத்வே மிகுந்த மகிழ்ச்சியடைகிறது மற்றும் இச்சேவையைப் பெறும் முதல் நகரமாக சென்னை திகழ்கிறது’ என்று கூறினார்.

இந்த பிராட்பேண்ட் சேவையுடன் வரும் வைபை மெஷ் தொழில்நுட்பம், 3000–-4000 சதுர அடிகள் பரப்பளவிலான அமைவிடத்தில் மிகச்சிறந்த இணைப்பு திறனை அளிக்கிறது. அதனால், சிக்னலில் எத்தகைய இழப்புமின்றி, பல சாதனங்களின் பரந்துபட்ட வலையமைப்பு தேவைப்பாடுகளை ஈடேற்ற முடியும். இந்த மெஷ் தீர்வுடன், வைபை சிக்னல் வீட்டின்/அலுவலகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் அடையும் மற்றும் ஒட்டுமொத்த அமைவிடத்திற்குமான கவரேஜை வழங்கும். மேலும் இதன் உள்ளமைந்த ஆன்டிவைரஸ் மென்பொருள் வழியாக, வைரஸ், மால்வேர் அல்லது ரேன்ஸம் வேர் ஆகியவற்றிலிருந்து சிறந்த பாதுகாப்பு கிடைக்கப்பெறும். இத்துடன் ஒவ்வொரு பயணரும், ஒரு சிக்கலற்ற, பாதுகாக்கப்பட்ட மற்றும் உயர் வேக பிராட்பேண்ட் அனுபவத்தை அனுபவிக்கலாம் என்று அவர் மேலும் கூறினார்.

வயர்லெஸ் மற்றும் வயர் லைன் பயனர்கள் என இருதரப்பிலும் சேர்த்து, இந்திய பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 100 மில்லியன் அளவினைக் கடந்துள்ளது, பிராட்பேண்ட் இணைப்புத்தன்மையின் ஆற்றலையும் மற்றும் அனைவருக்கும் சேவைகள் மற்றும் பயன்பாடுகள் கிடைக்கப்பெறுவதன் வழியாக இந்தியா டிஜிட்டல் ரீதியில் முன்னேறிவருவதையும் வெளிப்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *