செய்திகள்

விஷம் வைத்து சிறுவன் கொலை: காரைக்காலில் கடையடைப்பு போராட்டம்


அரசு மருத்துவனை மருத்துவர்கள் 2 பேர் சஸ்பெண்ட்


புதுச்சேரி, செப். 9–

காரைக்காலில் விஷம் வைத்து சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நியாயம் கேட்டு புதுச்சேரியில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் சிறுவன் காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரியில் உள்ள சர்வைட் ஆங்கிலப் பள்ளியில் ராஜேந்திரன்- – மாலதி தம்பதியின் மகன் பாலமணிகண்டன் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து மாணவன் பாலமணிகண்டனை கொலை செய்யப்பட்டான். வகுப்பில் அவன் முதல் மாணவனாக வந்ததை பொறுக்காத, காரைக்கால் வேட்டைக்காரன் வீதியை சேர்ந்த சக மாணவியின் தாயார் சகாயராணி விக்டோரியா தான் காவலாளி மூலம் அந்த குளிர்பானத்தை வழங்கியது தெரியவந்தது.

இதையடுத்து காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து சகாயராணி விக்டோரியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த விவகாரத்தை விசாரிக்க 3 பேர் கொண்ட மருத்துவ குழு அமைக்கப்பட்டது. மருத்துவ குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் புதுச்சேரி சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.

இந்நிலையில், விஷம் வைத்து கொல்லப்பட்ட சிறுவன் பாலமணிகண்டன் குடும்பத்தினருக்கு நியாயம் கேட்டும், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி காரைக்கால் மாவட்டத்தில் இன்று ஒரு நாள் கடைஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் ஆட்டோக்கள், தனியார் பேருந்துகள் எதும் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடி காட்சி அளிக்கின்றன.

இந்நிலையில் மாணவன் பாலமணிகண்டன் உயிரிழந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள் விஜயகுமார், பாலாஜி பணியிடைநீக்கம் செய்து புதுச்சேரி சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *