செய்திகள்

விவசாய கடன்கள் தள்ளுபடி: சேவூரில் அண்ணா திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அவிநாசி, பிப். 6–-

முதல்வர் எடப்பாடி பழனிசாமி 16.43 லட்சம் விவசாயிகளின் ரூ.12,110 கோடி பயிர்க்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.

இதையடுத்து சேவூர் கைகாட்டி ரவுண்டானா பகுதியில், அவினாசி வடக்கு ஒன்றிய அண்ணா திமுகவினர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அவினாசி வடக்கு ஒன்றிய செயலாளர் சேவூர் ஜி.வேலுசாமி தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத்தலைவர் சின்னக்கண்ணு, அவினாசி வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் சரவணக்குமார், ஒன்றிய விவசாய அணி செயலாளர் சுந்தரராஜன், விவசாய சங்க பொறுப்பாளர்கள் மேற்கு தோட்டம் பழனிசாமி, பந்தம்பாளையம் வேலுசாமி, அண்ணா திமுக தகவல் தொழில் நுட்பப்பிரிவு பொறுப்பாளர்கள் கார்த்தி, துரைப்பாண்டி ஹரிஹரன், அண்ணா திமுக பொறுப்பாளர்கள் ஆர்.சங்கரமூர்த்தி, கிருஷ்ணசாமி, கே.எம்.சுப்பிரமணியம், முருகசாமி, சி.எஸ்.அம்பி, செல்வராஜ், அங்கமுத்து, சித்ரா, செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *