செய்திகள்

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி: கலெக்டர் அண்ணாதுரை திறந்து வைத்தார்

விழுப்புரம், மார்ச் 27–

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தோ்தல் – 2021 முன்னிட்டு பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் ஆ.அண்ணாதுரை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் 6–ந் தேதி நடைபெறுவதை முன்னிட்டு பொது மக்களிடையே 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு கண்காட்சியில் என் வாக்கு என் உரிமை, வாக்களிப்பதில் பெருமை கொள்வோம், இந்திய ஜனநாயகத்தில் பங்குபெறுவோம், நமது இலக்கு 100 சதவீத வாக்குப்பதிவு, வாக்களிப்பது நம் அனைவரின் ஜனநாயக கடமை, என் வாக்கு விற்பனைக்கு அல்ல உள்ளிட்ட வாசகங்கள் மற்றும் தேர்தல் விழிப்புணர்வு உருவச்சிலைகள் அடங்கிய கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியின் மூலம் முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களிடையே 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பு.காஞ்சனா, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) லலிதா, முன்னோடி வங்கி மேலாளர் ஹரிஹரசுதன், நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, துணை ஆட்சியர் (பயிற்சி) ரூபினா, உதவி இயக்குநர் (பயிற்சி) சூர்யா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *