போஸ்டர் செய்தி

விழுப்புரம் பரிதாபம் கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவிகள் 3 பேர் பலி

 

விழுப்புரம் பிப் 10–

விழுப்புரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவிகள் 3 பேர் பலியானார்கள்.

விழுப்புரத்தை அடுத்த உள்ளது கக்கனூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பவதாரிணி (வயது 11), த/பெ. சண்முகம், மணிமொழி (வயது 14), த/பெ. மணி, கவுசல்யா (வயது 12) த/பெ. ஏழுமலை. இவர்கள் கரூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மாணவிகள் பேரும் இன்று காலை தங்கள் ஊருக்கு அருகே உள்ள கிணற்றில் துணி துவைப்பதற்கு சென்றனர். அவர்கள் 3 பேரும் கிணற்றில் இறங்கி துணி துவைத்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக 3 மாணவிகளும் கிணற்றில் தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் கெடார் காவல் நிலைய போலீசார் அப்பகுதிக்கு வந்து மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து 3 மாணவிகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவிகள் 3 பேர் இறந்ததால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *