செய்திகள்

விழுப்புரம் சாலைகளில் கிருமி நாசினி தெளிப்பு

Spread the love

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக

விழுப்புரம் சாலைகளில் கிருமி நாசினி தெளிப்பு

விழுப்புரம் மார்ச் 29–

விழுப்புரத்தில் நகராட்சி மற்றும் தீயணைப்புத் துறையினர் முக்கியச் சாலைகள், அரசு அலுவலகங்களில் நேற்று கிருமி நாசினியை தெளித்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கிராமங்கள், நகரங்களின் வீதிகளில் கிருமி நாசினி தெளிக்க 300 தனி வாகனங்களை ஏற்படுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி, விழுப்புரம் நகராட்சி நகராட்சி சார்பில் டேங்கர் லாரி மூலம் நேருஜி சாலை, கிழக்கு பாண்டி சாலை, திருச்சி, சென்னை நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் கடந்த 3 நாட்களாக கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.

இதேபோல, விழுப்புரம் தீயணைப்புத் துறை சார்பில், 2 தனி வாகனங்களில் கிருமி நாசினி கலந்த தண்ணீரை நிரப்பி முக்கியச் சாலைகள், பெருந்திட்ட வளாகம் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலகங்கள், சாலையோர வாகனங்களில் தெளித்து வருகின்றனர். கிராமப்புறங்களில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிராமங்களில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவிட்டதன்பேரில், வளவனூர், நரையூர் உள்ளிட்ட கிராமங்களில் கிருமி நாசினி மருந்து தெளித்தனர்.

கண்டமானடி, அரியலூர், மரகதபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படவில்லை என்று அந்தக் கிராமத்தினர் அதிருப்தி தெரிவித்தனர். இதனால், கிராமப்புறங்களிலும் கண்காணித்து கிருமி நாசினி தெளிக்க அறிவுறுத்த வேண்டும், நகர்ப்புறங்களில் பிரதான சாலையில் தெளிப்பதோடு நிற்காமல், பிற குடியிருப்பு சாலைகளிலும் கிருமி நாசினி தெளிப்பதை உறுதிபடுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *