செய்திகள்

விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கட்டில், மெத்தைகள்: அமைச்சர் சி.வி. சண்முகம் முன்னிலையில் வழங்கப்பட்டது

Spread the love
கலெக்டர் அண்ணாதுரையுடன் படித்த காரைக்குடி அழகப்பா கல்லூரி முன்னாள் மாணவர்கள் சார்பில்
விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கட்டில், மெத்தைகள்:
அமைச்சர் சி.வி. சண்முகம் முன்னிலையில் வழங்கப்பட்டது

விழுப்புரம், மே 22

-விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உடன் படித்த காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சார்பில் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கட்டில், மெத்தைகள் அமைச்சர் சி.வி. சண்முகம் முன்னிலையில் வழங்கப்பட்டது.

காரைக்குடி அழகப்பா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கடந்த 1993- 97 -ம் கல்வி ஆண்டில் தற்போதைய விழுப்புரம் மாவட்ட கலெக்டரான அண்ணாதுரையுடன் படித்த முன்னாள் மாணவ, மாணவிகள், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு வரும் கொரோனா நோயாளிகள் பயன்படுத்தும் வகையில் 25 கட்டில்கள், மெத்தைகள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினர்.

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாக உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம், மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் இந்த உபகரணங்களை பெற்றுக் கொண்டு, முன்னாள் மாணவர்களுக்கு நன்றி தெரிவித்து பாராட்டினர்.

விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினர் ஆர். முத்தமிழ்செல்வன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், திட்ட இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சார்பாக அபிராமன் வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *