செய்திகள்

விழுப்புரத்தில் நீதிமன்ற கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

Makkal Kural Official

விழுப்புரம், டிச.17-–

வக்கீல்கள், வழக்கில் ஆஜராக வெல்பர் ஸ்டாம்புக்கு இதுவரை ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்பட்டதை தற்போது ரூ.120 ஆக உயர்த்தப்பட்டதை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு பார்கவுன்சிலும் வக்கீல்களுக்கான சேமநல நிதி ரூ.10 லட்சம் வழங்கி வருவதை ரூ.30 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். அகில இந்திய பார் கவுன்சில் ரூ.50 ஆயிரம் வழங்கி வருவதை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கக்கோரியும் நேற்று விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மூத்த வக்கீல் தமிழ்செல்வன் தலைமை தாங்கி, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் வக்கீல்கள் அசோகன், துரைமுருகன், இளம்வழுதி, ரஸ்கின்ஜோசப், பிரபு, சங்கீத்குமார், சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *