சென்னை ஜூலை 19
கொச்சியை சேர்ந்த ஸ்போர்ட்ஸ் எக்ஸோடிகா நிறுவனம், குடும்பச் சுற்றுலாவுக்கு பிற மாநிலங்களுக்கு செல்லும்போது, அங்கு உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் லீக் போட்டியை காண ஆர்வம் இருக்கும். விளையாட்டுப் போட்டியையும், சுற்றுலாவையும் ஒருங்கிணைத்து கேரள சுற்றுலா வாரியம் கூட்டுடன் கிரிக்கெட் லெஷர் லீக் நடத்துகிறது என்று இதன் செயல்பாடு டைரக்டர் சஞ்சு சாமுவேல் தெரிவித்தார்.
செப்டம்பர் 21ந் தேதி முதல் 8 நாட்களுக்கு இந்த போட்டி நடைபெறுகிறது. கிரிக்கெட் போன்ற இதர விளையாட்டுகளையும் ஸ்போர்ட்ஸ் எக்ஸோடிகா ஊக்குவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
கேரள மாநில கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் வாட் மோர், விடுமுறையில் தங்களுக்குப் பிடித்த விளையாட்டு போட்டியை பார்ப்பதுடன் சுற்றுலாத் தலங்களையும் கண்டு ரசிக்க முடியும். வெளி நாடுகளில் இது மிகவும் பிரபலமானது என்றார்.
கேரள மாநிலத்தில் மலைப்பிரதேசம், வனப்பகுதியில் கடல், ஆறு, படகுப் பயணம் ஆகியவற்றுடன் இந்த கிரிக்கெட் லீக் போட்டியை பார்வையிட்டு ரசிக்கலாம்.