செய்திகள்

விளம்பரத்தில் திருநங்கை: பீமா ஜூவல்லரிக்கு குவியும் பாராட்டு!

சென்னை, ஏப்.20–

விளம்பரங்கள் என்றாலே அழகான இளம் பெண்களை வைத்தே எடுக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் மாடலிங் அழகிகள், இது வாடிக்கை. ஆனால் மாற்றி யோசித்திருக்கும் ‘பீமா ஜூவல்லரி’ திருநங்கையை வைத்து எடுத்திருக்கும், நகைக் கடை விளம்பரப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாயகியே–நிஜ திருநங்கை தான்.

இது குறித்து பீமா ஜூவல்லரியின் இணை செயல்பாட்டுத் தலைவர் நவ்யா சுகாஸ் கூறியதாவது:–

‘‘பொதுவாகவே நகைக் கடை விளம்பரம் என்றால் மணமகள், திருமணம் ஆகியவற்றை மையப்படுத்தியே வரும். நாங்கள் வெறுமனே விளம்பரமாக மட்டும் அல்லாது திருநங்கை சமூகம் குறித்த உரையாடலாகவும் இதை தொடங்க விரும்பினோம்.

அதை இப்போது தொடங்காவிட்டால் எப்போதும் சாத்தியம் இல்லை. வெறுமனே விலை குறைப்பு, சலுகை என இல்லாமல் விளம்பரத்தின் மூலம் சமூகத்துக்கும், கருத்துச் சொல்ல விரும்பினோம். வளரும் பருவத்தில் தன் உடலில் ஏற்படும் மாற்றத்தைப் பார்த்து பதற்றம் அடையும் குழந்தை, சுற்றியிருப்பவர்களின் அரவணைப்பால் பெண்ணாக மாறுவதை பதிவு செய்திருக்கிறோம். இது சமூக மாற்றத்துக்கான விதை.’’

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விளம்பரப் படத்தில் ஆணாக இருந்து பெண்ணாக மாறும் பாத்திரத்தில் நடித்திருக்கும் மீரா சிங்கானியா, நிஜமாகவே திருநங்கை சமூகத்தை சேர்ந்தவர். டெல்லியில் உள்ள அம்பேத்கர் பல்கலைக் கழகத்தில் சோஷியாலஜி பயிலும் மீரா, பொது வெளியில் திருநங்கை சமூகத்தின் குரலை ஒலிப்பவர்.

96 ஆண்டு பாரம்பரிய பீமா ஜூவல்லரி, பாரம்பரிய தங்க நகைகளை திருமண விழாவுக்கு தயாரிப்பதில் சிறந்து விளங்குகிறது. ‘உண்மையான பாசம்’ என்ற தலைப்பில் எடுத்துள்ள வீடியோ விளம்பரம் இது.

குடும்பத்தில் உள்ள இளைஞருக்கு உடலில் மாற்றம் ஏற்பட்டு, மூன்றாம் பாலினை நங்கையாக அவர் மாற, குடும்பத்தினர் அவருக்கு ஆதரவு அளித்து பெரியோர்கள் பாரம்பரிய நகைகளை அந்த திருநங்கைக்கு அணிவித்து மகிழ்வதாக வீடியோ விவரிக்கிறது. அனிமல் விளம்பர ஏஜென்சி வடிவமைத்து ரான்சம் பிலிம் தயாரித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *