லாவண்யாவிற்கு ஒரு கொரியர் வந்தது. அது யார் அனுப்பியது எங்கிருந்து வந்தது? என்றெல்லாம் அவளுக்குத் தெரியாது. தீர விசாரித்தாள் லாவண்யா.
” எனக்கு அப்படி யாரும் அனுப்பவில்லையே? என்று வியப்பாகவும் கேள்வியாகவும் கேட்டாள்.
” இல்லங்க உங்க பேர் போட்டு தான் இந்த கொரியர் வந்திருக்கு. நீங்க தான லாவண்யா ? என்று மறுபடியும் அவளை எதிர் கேள்வி கேட்டான் கொரியர் பாய்
“ஆமா நான் தான் லாவண்யா ஆனா டூ அட்ரஸ் தப்பா இருக்கு ஃப்ரம் அட்ரஸ் என்னுது தான். எனக்கு என்னவோ இதில் உடன்பாடு இல்லை . எனக்கு இந்த போஸ்ட் வேண்டாம்” என்றாள் லாவண்யா.
” மேடம் இத டெலிவரி பண்றது தான் என்னுடைய வேலை. அதை வாங்கிக்கிறதும் வாங்காததும் உங்களுடைய இஷ்டம். பட் நீங்க உங்களுடைய கொரியரை வாங்கி தான் ஆகணும் ” என்று அடம்பிடித்தான் அந்த கொரியர் பாய்.
மறுபடியும் அந்த கொரியர் கவரைத் திரும்ப திரும்ப பார்த்த லாவண்யாவுக்கு கொஞ்சம் பயம் ஏற்பட்டது .
“இப்ப எல்லாம் நிறைய பேரு கொரியர் வந்திருக்கு உங்களுக்கு. பார்சல் வந்திருக்குன்னு பொய் சொல்லி பணம் பிடுங்க பாப்பாங்க ; அத நீ ஏத்துக்க கூடாது. வர்றவங்க நல்லவங்களா ?இல்ல கெட்டவங்களா இருப்பாங்களான்னு தெரியாது. அதுவே உனக்கு பிரச்சனை அமையும். அப்படின்னு தோழி ரஞ்சனி சொன்னது நினைவில் வந்த போது மறுபடியும் மறுத்தாள் லாவண்யா.
எதுக்கு வம்பு நாம ஏதாவது பிரச்சனையை சிக்கிடா தேவையில்லாத வேலை என்று மறுபடியும் அந்த கொரியரை நிராகரித்தாள் லாவண்யா.
” இல்ல மேடம் நிச்சயமா இது உங்களுக்கு தான் உங்க பிரண்டு யாராவது அனுப்பி இருப்பாங்க அதை நீங்க வாங்கி தா ஆகணும் ” என்று பேனாவையும் அவள் கையெழுத்து போட்டு கொரியர் வாங்கியதற்கான சான்றிதழையும் நீட்டினான் அந்த கொரியர் பாய்.
வேறு வழி இன்றி இருமனதாக அந்த கொரியரை வாங்கிய லாவண்யா கையெழுத்து போட்டு வாங்கினாள். இதைத் திறப்பதா இல்லை அப்படியே விட்டு விடுவதா? என்று கேள்விக்குறியாக நின்றாள். அப்போது அவளின் செல்போன் சிணுங்கியது.
” என்ன லாவண்யா கொரியர் வந்ததா? என்று எதிர் திசை இருந்த குரல் அவளை என்னவோ செய்தது.
” யாரது எதுக்காக நமக்கு கொரியர் அனுப்பனும். பேசுறது யாருன்னு தெரியலையே?” என்று குழம்பிப் போய் இருந்தவளுக்கு
“அட நான் தான் உன்னோட பிரண்டு முனீஸ் பேசுறேன்” என்று அவளிடம் கேள்வி கேட்க முனீஸ் என்று தனக்கு தானே உச்சரித்துக் கொண்டவள், யாராக இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தாள். அதற்குள் செல்போன் அழைப்பு துண்டிக்கப்பட்டது.
சரி, பார்சலை திறந்து தான் பார்க்கலாம் என்று திறந்து பார்த்தாள். அத்தனையும் அவள் புகைப்படங்கள். இது எப்படி எனக்கு தெரியாம ? அன்று அவள் ஆச்சரியத்தில் உச்சிக்கு சென்ற போது, சென்ற வாரம் அவள் ஊட்டிக்கு டூர் சென்ற அத்தனை புகைப்படங்களும் அவள், அவள் நண்பர்களுடன் இருந்தது என்று அத்தனையும் பளிச் பளிச்சென்று இருந்தன
” யாரது நம்மைத் தொடர்ந்து புகைப்படம் எடுத்தது? தெரியவில்லை என்று குழம்பினாள்.
அவளுக்கு வந்து அழைப்பு அதோடு துண்டிக்கப்பட்டது. திரும்பவும் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டாள். தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாகச் சொன்னது அந்த அலைபேசி . குழப்பத்தின் உச்சிக்கு சென்றவளுக்கு அந்தப் புகைப்படங்களை ரசித்துக் கொண்டே இருந்தாள். அவளுடன் பேசிய அந்த நபர் வேறு யாரும் அல்ல .
நீண்ட நாட்களாக அவளைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கும் அவள் வீட்டுக்கு அருகில் இருக்கும் தினேஷ் தான் என்பது அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை தான்.
#சிறுகதை