செய்திகள்

விரைவில் வருகிறது குறைந்த விலை தடுப்பூசி

ஐதராபாத், ஜூன் 6–

பயோ-இ நிறுவனத்தின் ‘கார்ப்வேக்ஸ்’ கொரோனா தடுப்பூசியின் விலையை 250 ரூபாயாக நிர்ணயிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனம் ‘கார்ப்வேக்ஸ்’ என்ற பெயரில் கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ள இதற்கு மத்திய அரசு விரைவில் அவசரகால பயன்பாட்டு அனுமதியை வழங்கும் என்று தெரிகிறது.

இந்நிலையில், 30 கோடி டோஸ் தடுப்பூசியை கொள்முதல் செய்வதற்காக பயாலஜிக்கல்-இ நிறுவனத்துடன் மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு 1,500 கோடி ரூபாயை முன்பணமாக அரசு வழங்க உள்ளது.

இந்நிலையில், கார்ப்வேக்ஸ் தடுப்பூசியின் ஒரு டோஸ் விலை 250 ரூபாயாக நிர்ணயிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி, மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்-க்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு 1,200 ரூபாய்-க்கும் விற்கப்படுகிறது. இதுபோல புனே நகரில் உள்ள சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு முறையே 300 மற்றும் 600 ரூபாய்-க்கு விற்கப்படுகிறது. ரஷ்யாவின் ஸ்புட்னிக்–-வி தடுப்பூசி விலை இந்தியாவில் ரூ.995 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பயோ-இ நிறுவனத்தின் கார்ப்வேக்ஸ் விலை 250 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *