சினிமா

விரைவில் ரிலீஸ் சமுத்திரக்கனியின் ‘‘நாடோடிகள் 2’’

2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது .

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் “நாடோடிகள் 2 ” உருவாகி வருகிறது.

இதில் சசிகுமார் – அஞ்சலி காதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். மற்றும் பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார்.

இசை :- ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு :- ஏகாம்பரம், கலை :- ஜாக்கி, எடிட்டிங் :- ரமேஷ், பாடலாசிரியர் : யுகபாரதி, சண்டை பயிற்சி :- திலீப் சுப்புராயன், நடனம் :- திணேஷ், ஜான், தயாரிப்பு மேற்பார்வை :- சிவசந்திரன், தயாரிப்பு -: எஸ்.நந்தகோபால், எழுதி இயக்குகிறார் – சமுத்திரகனி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *