செய்திகள்

விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ. இல்ல திருமண விழா: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சென்னை, ஜூன் 3–

தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான விருகை வி.என்.ரவி இல்ல திருமண விழாவிற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மணமக்களுக்கு வாழ்த்து மடல் அனுப்பி உள்ளார்.

அம்மாவின் நல்லாசியுடனும், அண்ணா தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்வாழ்த்துகளுடன் தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான விருகை வி.என். ரவியின் மூத்த மகள் வி.என்.ஆர். ரூபிகா திருமணம் விருகம்பாக்கத்தில் எளிய முறையில் நடைபெற்றது.

இந்த திருமணத்திற்கு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மணமக்களை வாழ்த்தி வாழ்த்து மடலை அனுப்பி வைத்தார்.

திருமண விழாவில் வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா, வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு, தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளரும், தியாகராயநகர் சட்டமன்ற உறுப்பினருமான தி.நகர் பி.சத்யா, வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ்.ராஜேஷ், கழக அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் ஆர்.கமலகண்ணன், எம்.கே.அசோக் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும் வி.என்.கண்ணன், வி.என்.பன்னீர், மாவட்ட கழக நிர்வாகிகள் ஆர்.ராஜந்திரபாபு, நூர்ஜகான், கோ.சாமிநாதன், சொ.கடும்பாடி, ஆர்.தேவகி, பகுதி கழக செயலாளர்கள்: என்.எஸ்.மோகன், வேளச்சோி.எம்.ஏ.மூர்த்தி, வட்ட கழக செயலாளர்கள் ஏ.எம்.காமராஜ், சி.கே.முருகன், ஏ.ராமமூர்த்தி, சி.பழனி, சி.மகேஷ், எம்.சுகுமார், நா.பாஸ்கரன், பி.கசாலி, பி.காசி, எஸ்.பி.பழனி, என்.ஆர்.ஜோசப், டி.பிரபாகரன், அண்ணாமலை, ஆர்.சேகர், ராணி அண்ணாநகர் டி.கோவிந்தன், எஸ்.செல்வராஜ், ஏ.பாஸ்கர், எம்.ரவீந்திரன், எம்.இமாம், எம்.வசந்தகுமார், எஸ்.எம்.சேக்அலி, டி.ஆறுமுகம், டி.ஆம்ஸ்ட்ராங், பிற அணி மாவட்ட செயலாளர்கள் எஸ்.அபுபக்கர், பி.டி.சி.செல்வம், கே.டி.தேவேந்திரன், கே.எஸ்.மனோகரன், எம்.ராமலிங்கம், கணேஷ்பாபு, எஸ்.பி.குமரர் மற்றும் கழக நிர்வாகிகளும், குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *