செய்திகள்

வியாசர்பாடியில் ரவடி வெட்டிக் கொலை

சென்னை, ஆக.7 –

வியாசர்பாடியில் ரவடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

வியாசர்பாடி மல்லிகைப்பூ நகரைச் தாமோதரன் வயது 26. எம்.கே.பி. நகர் , கொடுங்கையூர் காவல் நிலையங்களில் பல கொலைமுயற்சி , வழிப்பறி , அடிதடி வழக்குகள் தாமோதரன் மீது பதிவாகியிருக்கிறது. அவரைப் போலீசார் தேடி வந்தனர். அவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் எம்.கே.பி. நகர் பகுதியில் அவர் சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பலைச் சேர்ந்தவர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டுத் தப்பி ஓடிவிட்டனர் . முன்விரோதம் காரணமாக தாமோதரன் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *