நல்வாழ்வு சிந்தனைகள்
வியர்வை வாடையைத் தவிர்க்க, ரோல் ஆன் அல்லது டியோடரன்ட் உபயோகிப்பது சரியானதல்ல. வாசனை சோப் உபயோகிப்பதற்குப் பதிலாக நீங்கள் ஆன்டி பாக்டீரியல் சோப் பயன்படுத்தத் தொடங்கலாம்.
இவற்றை உபயோகிக்கும்போது உடலில் வியர்வை தேங்காமல் சருமம் ஈரப்பதமின்றி இருக்கும்.
மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் உங்கள் உடை. காற்றோட்டமுள்ள, தளர்வான, காட்டன் உடைகளையே அணிய வேண்டும். தினமும் இருவேளைகள் குளிக்க வேண்டும். குளிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் உங்கள் உடைகள், உள்ளாடைகளை மாற்ற வேண்டியதும் முக்கியம்.இவற்றையெல்லாம் செய்தும் கட்டுப்படாத வியர்வை என்றால் போடாக்ஸ் சிகிச்சை உங்களுக்குப் பலனளிக்கலாம். உள்ளங்கை, அக்குள், பாதம் என உங்களுக்கு உடலின் எந்தப் பகுதியில் அதிக வியர்வை இருக்கிறதோ, அங்கு போடாக்ஸ் சிகிச்சை கொடுக்கப்படும்.
சரும மருத்துவரை அணுகினால், உங்களுடைய பிரச்னையை முழுமையாக ஆராய்ந்து, அதற்கான காரணம் அறிந்து, தேவையான சிகிச்சையைப் பரிந்துரைப்பார். போடாக்ஸ் சிகிச்சை தேவைப்பட்டால் அது குறித்தும் உங்களுக்கு விளக்குவார்.