செய்திகள்

விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி கோபுரங்கள் அமைக்கக் கூடாது: தொலைத் தொடர்புத்துறை உத்தரவு

டெல்லி, டிச. 1–

விமானத்தின் கருவிகள் பாதிக்கப்படும் என்பதால், விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சிக்னல் கோபுரங்கள் அமைக்கக் கூடாது என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைத் தொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அமலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் படிப்படியாக நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான கருவிகளை பாதிக்கும்

இந்த நிலையில், விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சிக்னல் கோபுரங்கள் அமைக்கக் கூடாது என, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைத் தொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைத்தொடர்புத்துறை அனுப்பியுள்ள கடிதத்தில், ‘விமானத்தின் கருவிகள் பாதிக்கப்படும் என்பதால், விமான நிலையங்களின் ஓடுபாதையின் இருபுறங்களிலும் 2,100 மீட்டர் தூரத்திற்கும், ஓடுபாதையின் மத்திய பகுதியில் இருந்து 910 மீட்டர் தூரத்திற்கும் இடையே 3,300 முதல் 3,670 மெகா ஹெர்ட்ஸ் வரையிலான அலைவரிசையைக் கொண்ட 5ஜி சிக்னல் கோபுரங்கள் அமைக்க தடை விதிக்கப்படுகிறது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *