செய்திகள்

விபத்தில் மரணம் அடைந்த ஹவில்தார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்

Makkal Kural Official

முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை, டிச.28-–

விபத்தில் மரணம் அடைந்த ஹவில்தார் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–-

உள்வட்ட பாதுகாப்பு பிரிவில் ஹவில்தாராக பணியாற்றி வந்த செந்தில்வேல் பணி நிமித்தமாக காஞ்சீபுரத்தில் இருந்து அரக்கோணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஆட்டுப்பாக்கம் ரெயில்வே கேட் எதிரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

செந்தில்வேல் மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். செந்தில்வேலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *