செய்திகள்

விபசார விடுதி நடத்திய பெண் கைது

சென்னை, நவ. 21

சென்னை, சைதாப்பேட்டையில் குடியிருப்பு பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமனுக்கு ரகசிய தகவல்கள் வந்தன. அதனையடுத்து விக்ரமனின் தனிப்படை எஸ்ஐ செல்வகுமார், எஸ்ஐ மஞ்சுளா, தலைமைக்காவலர் வெvங்கடேசன், முதல்நிலை காவலர் பூர்ணகுமார் அடங்கிய தனிப்படை போலீசார் அது தொடர்பாக தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சைதாப்பேட்டையில் உள்ள சுப்ரமணிய முதலி தெருவில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த மயிலாப்பூரைச் சேர்ந்த கீதா (வயது 32) என்ற பெண்ணை கைது செய்தனர்.

பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 3 பெண்களை தனிப்படை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *