செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க முதலமைச்சருக்கு அழைப்பு: இந்து முன்னணி மாநில தலைவர்

Makkal Kural Official

தமிழகம் முழுவதும் 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

திருப்பூர், செப். 6–

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இது தொடர்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய காவல்துறையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. 3 அடி, 5 அடி, 10 அடி உயரங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது. தனிப்பட்ட முறையில் வீடுகளில் 15 லட்சம் மக்கள் சிறிய விநாயகர் சிலைகள் வைக்கிறார்கள். திருப்பூரில் 4-வது நாளும், கோவையில் 5-வது நாளும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்கப்படுகிறது. திருப்பூர், கோவையில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழக முதலமைச்சர் பங்கேற்க வேண்டும். அவர் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று இந்து முன்னணி கடிதம் அனுப்பியுள்ளது. இந்துக்களின் மக்கள் தொகைற்போது வரை 9 சதவீதம் குறைந்துள்ளது. இந்துக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விநாயகர் சிலை வைக்க அரசு தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகளை தெரிவித்து தடை போடுகிறார்கள். தடை போட போட இந்து மக்கள் எழுச்சி பெற்று வருகிறார்கள். இந்த அரசு மீது இந்து மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இதை தமிழக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.

திருப்பூரில் 1,500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது. இந்த ஆண்டும் எழுச்சியோடு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது.பழனியில் நடைபெற்ற முருகன் மாநாட்டில் பங்கேற்க எனக்கு அழைப்பு வரவில்லை. அதனால் நான் பங்கேற்கவில்லை. வெளிநாட்டில் உள்ள இந்துக்களையும் மாநாட்டுக்கு அழைத்துள்ளதை பார்க்கும்போது இந்துக்களின் எழுச்சியை இந்த அரசு புரிந்துள்ளதை காட்டுகிறது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்று இருக்க வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு நன்கொடை வசூலிப்பதில் பிரச்சனை செய்வதாக இந்து முன்னணி மீது தவறான தகவலை பரப்புகிறார்கள். எங்களுக்கு கெட்ட பெயர் உருவாக்குவதற்காக சிலர் செயல்படுகிறார்கள். நன்கொடை வசூல் பிரச்சனை ஏற்பட்டால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம். விநாயகர் சதுர்த்திக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளித்தால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார், மாநில செயலாளர் செந்தில்குமார் உடனிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *