செய்திகள்

விதிமுறைகளை கடைபிடிக்காத தொழில் நிறுவனங்கள் 28 நாட்கள் முடக்கப்படும்

திருநெல்வேலியில்

விதிமுறைகளை கடைபிடிக்காத தொழில் நிறுவனங்கள் 28 நாட்கள் முடக்கப்படும்:

கலெக்டர் எச்சரிக்கை

 

திருநெல்வேலி, மே.06–

தொழில் நிறுவனங்கள் கடைபிடிக்க கூடிய விதிமுறைகளை குறித்து திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் தெரிவிக்கையில்:-–

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பாதிப்பிற்கு ஏற்றவாறு சிவப்பு, ஆரஞ்ச், பச்சை என்று மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதில் நோய் தொற்று சற்று குறைவாக உள்ள திருநெல்வேலி மாவட்டம் ஆரஞ்ச் மண்டலமாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஆரஞ்ச் மண்டலம் பகுதியில் மே மாதம் 6ந் தேதி முதல் அனைத்து வகையான தொழில் நிறுவனங்கள் இயங்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்த தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்கும் பட்சத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை தொழில் நிறுவனம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும், கழிப்பறை உள்ளிட்டவைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தெளிக்கப்டும் நேரம் குறித்து குறிப்பேடுகளில் பதிவு செய்ய வேண்டும். தொழில் நிறுவனங்களுக்கு பணிக்கு வரும் தொழிலாளர்களை நிறுவனத்திற்கு வரும் போது காய்ச்சல் குறித்த பரிசோதனை செய்ய வேண்டும், முககவசம் அணிந்து வர அறிவுறுத்த வேண்டும், சமூக விலகல் வரையறை செய்து பணியாளர்களுக்கு பணிகளை வழங்குதல் வேண்டும். நிறுவனத்திற்கள் அடிக்கடி பணியாளர்கள் கைகளை சோப்பு அல்லது சானிடைஸர்களை கொண்டு சுத்தப்படுத்திட அறிவுறுத்திட வேண்டும். வேலைக்கு வரும் அனைத்து நபர்களுக்கும் அடையாள அட்டை நிறுவனத்தினரால் வழங்கப்பட வேண்டும். மருத்துவ தகுதி அடிப்படையில் உடற்தகுதி பெற்று 55 வயதியினை கடந்தவர்களை முதல் சிப்டிற்கு அழைத்து பணிபுரிய செய்திட வேண்டும். 200 நபர்கள் பணிபுரியும் நிறுவனமாக இருந்தால் ஒரு மருத்தவர் அழைக்கும் நேரத்தில் நிறுவனத்திற்கு வருகைதர செய்தல் வேண்டும். 201 முதல் 1000 நபர்கள் பணிபுரியும் நிறுவனமாக இருந்தால் ஒரு பகுதி நேர மருத்துவரை நியமித்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நிறுவனத்திற்கு வருகை தந்து பரிசோதிக்க வேண்டும். 1000 நபர்களுக்கு மேல் பணிபுரியும் நிறுவனமாக இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனையுடன் இணைந்து தினசரி மருத்துவர் நிறுவனத்திற்கு வருகை தர வேண்டும். இத்தகைய விதிமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும். இதனை மீறி யாருக்காவது தொற்று ஏற்பட்டால் தொழில் நிறுவன உரிமையாளரே பொறுப்பேற்க வேண்டும். இத்தகைய விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் தொழில் நிறுவனத்தில் தொற்று அதிகரித்தால் அந்த தொழில் நிறவனங்களை 28 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு தீவரமாக கண்காணிக்கப்படும் மற்றும் சட்டபடி நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *