வாழ்வியல்

விதவைகளின் நிலை, மறுவாழ்வு திட்டங்கள் பற்றிய வலைத் தளங்கள்!

இன்று உலகில் வாழும் மக்களில் 30 கோடி பேர் விதவைகளாக உள்ளனர். அதாவது ஏதோ ஒரு வயதில், ஏதோ ஒரு காரணத்தால் முதலில் கணவன் இறந்துவிட்டால் (Widow) விதவை என்றழைக்கப்படுகிறார்கள். இந்தியாவில் 135 கோடி மக்களில் 5 கோடி பெண்கள் விதவைகளாக உள்ளனர். அதில் அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், 7.30 கோடி பேர் வாழும் தமிழ்நாட்டில் 45 லட்சம் பெண்கள் உள்ளனர். இதில் அதிகம் பேர் இளம் விதவைகள்.

குடியால், விபத்தால், சுனாமியால், நோயால் அதிகமான இளைஞர்கள் இறந்து விட்டனர். இன்றும் குடியால் வரும் நோய்களால், விபத்தால், உடலை சரியாகப் பேணாததால் இளம் வயது இளைஞர்கள் இறந்து போவது அதிகமாகி வருகின்றது.

ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது, 25 கோடி பெண்கள் உலகில் விதவைகளாக உள்ளனர். அதில் 5 கோடி பேர் இந்தியாவில் உள்ளனர். தமிழ்நாட்டில் 45 லட்சம் பேர் விதவைகளாக உள்ளனர். தமிழகத்தில் 1 கோடிக்கு மேல் இளைஞர்கள் முழு நேர குடிகாரர்களாக உள்ளனர். இதில் 50 லட்சம் பேர் இளைஞர்கள். 20% பேர் மீளமுடியாத அளவுக்கு குடிக்காரர்களாக உள்ளனர்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும், 60 ஆயிரம் விபத்துக்கள் நடக்கின்றன. இதில் 60% வரை குடிதான் காரணமாக உள்ளது. அதேபோல் சுனாமி, கஜா புயல், வல வகை விஷ ஜுரங்களாலும் நோய்களாலும் பல ஆண்கள் இறக்கின்றனர். நோயை வருமுன் காப்பதில்லை என்பதே காரணம். படித்தவர்கள் கூட முழு உடல் பரிசோதனை செய்வதில்லை. குடி, பல விவாகரத்துகளுக்கு காரணமாக உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களிலும் உள்ள விதவைகளிடம் அவர்களது சங்க உதவியோடு பேசினோம். சில வசதி படைத்த குடும்பங்களில் சொத்துக்காக விதவைகளை மணக்கின்றனர். ஆனால் ஏழைகள் நடுத்தர வர்த்தகத்தினர், கிராமங்களில் உள்ள விவசாய குடும்பங்களைச் சேர்ந்த விதவைகளை, அவர்கள் குடும்பத்தினரே மதிப்பதில்லை. பலர் கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகின்றனர்.

நிரந்தர வருமானமுள்ளவர்கள், அரசு வேலையில் உள்ள வசதியானவர்கள், அழகும் படிப்பும் உடையவர்களுக்கு மறுமணம் செய்ய இளைஞர்கள் கிடைத்து விடுகின்றனர். ஆனால் 80% விதவைகள் தங்கள் மன வேதனையுடன் வாழ்வதாக தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் 35 வயதுக்கு கீழ் 20 லட்சம் விதவைகள் உள்ளனர். ஆனால் மத்திய, மாநில அரசுகள் தரும் உதவி, பயிற்சி, கடன், வேலை வாய்ப்பில் முன்னுரிமை பற்றிய விழிப்புணர்வு இவர்களுக்கு இல்லை. விதவைகளை அனைவரும் மதிக்கப்பட வேண்டும். விதவைகள் வாழ்வில் முன்னேற முடியுமென்ற நம்பிக்கையுடன் வாழ, கீழ்கண்ட வலைகள் பார்த்து அரசின் உதவிகளை அறியலாம்.

www.empoweringwomen.com, www.india.womenpower.com, www.tamilnadu women.com, www.tn.gov.in/socialwelfare, www.india.gov.in/socialjustice. www.tamilnadu women commission.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *