செய்திகள்

விண்வெளி நிலையத்துக்கு 3 வீரர்களை அனுப்பும் சீனா

பீஜிங், ஜூன் 11–

சீனா அமைத்து வரும் விண்வெளி நிலையத்துக்கு 3 ஆண் வீரர்களை ஜூன் 16 ந்தேதி அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையம் 1998 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த விண்வெளி நிலைய திட்டத்தில் அமெரிக்காவின் நாசா உள்பட, ரஷ்யா, ஐரோப்பா, கனடா நாடுகளின் விண்வெளி நிறுவனங்களும் இணைந்து ஆய்வு பணிகளை செய்து வருகிறது. இந்த சர்வதேச விண்வெளி நிறுவனத்தில், அமெரிக்காவின் ஆட்சேபணை காரணமாக சீனா பங்கேற்கவில்லை.

இதையடுத்து சீனா தனக்கென சொந்தமாக விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைத்து வருகிறது. ‘தியான்ஹாங்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையத்தின் பிரதான பகுதி கடந்த ஏப்ரல் 29ம் தேதி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. கடந்த மாத காலமாக, விண்கலம் மூலம் எரிபொருள், உணவு, வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்துக்கான உபகரணங்கள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டன.

16 ந்தேதி 3 வீரர்கள்

இந்நிலையில், மூன்று விண்வெளி வீரர்கள் செல்லவுள்ள ‘சென்ஷோ12’ விண்கலத்தை ஏற்றிக்கொண்டு செல்லும் லாங் மார்ச் 2 எப் ஒய்12 ராக்கெட், வடமேற்கு சீனாவில் உள்ள ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக சீன விண்வெளி பொறியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த ராக்கெட் ஜூன் 16ம் தேதி ஏவ உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

‘முதல்முறையாக விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்படவுள்ள மூவரும் ஆண்கள்; எதிர்காலத்தில் விண்வெளி வீராங்கனைகளும் அனுப்பப்படுவர்கள்’ என சீன விண்வெளி நிறுவனத்தின் அதிகாரியும், சீனாவின் முதல் விண்வெளி வீரரருமான யாங் லிவி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *