செய்திகள் நாடும் நடப்பும்

விண்வெளி ஆய்வில் புதிய சகாப்தத்தை துவக்கும் இஸ்ரோ


நாடும் நடப்பும் – ஆர்.முத்துக்குமார்


புத்தாண்டு பரிசாக இஸ்ரோ ஜனவரி 1 அன்று எக்ஸ்போசாட் (XPoSat) செயற்கைகோளை வெற்றிகரமாக அதீத நம்பகத்தன்மை கொண்ட பி.எஸ்.எல்.வி. ராக்கெட் உதவியுடன் விண்வெளியில் செலுத்தப்பட்டு வெளிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இந்த செயற்கைகோளின் சிறப்பு கருந்துளைகளை அதாவது Black Hole, நியூட்ரான்கள் பற்றியும் ஆய்வுகள் மேற்கொள்ள பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கருந்துளைகளின் தன்மை பற்றி பல ஆய்வுகளை மேற்கொண்டு முற்போக்கான கருத்துக்களை வெளியிட்ட பெருமை தமிழகம் தந்த அமெரிக்கா வாழ் இந்திய கணிதவியல் மேதை எஸ்.சந்திரசேகர் ஆவார்.

அவர் கூற்றின் படி வானில் உள்ள நட்சத்திரம் ஒரு கட்டத்தில் அதன் எரிசக்தியை முழுமையாக பயன்படுத்தி விட்டால் அதன் ஈர்ப்பு சக்தி அதன் ஒளியையும் மின்காந்த அலைகளையும் கூட தன்னுள் ஈர்த்து கருமையான ஓரு விண்வெளி பொருளாக மாறிவிடும். அதன் ஈர்ப்பின் பயனாக ஏற்படக்கூடிய பல்வேறு நிகழ்வுகள், காலச்சக்கர ஓட்டத்தில் ஏற்படுத்த இருக்கும் விளைவுகள் பற்றி ஆய்வுகள் தொடர ஆரம்பப்புள்ளி வைத்தவர் ஆவார்.

இன்றும் விண்வெளியின் மர்மமாக தொடரும் இந்த கருந்துளைகளை விண்ணிலிருந்து ஆய்வு செய்யும் வல்லமை நாசா விஞ்ஞானிகளிடம் இருந்தது. இனி இஸ்ரோ விஞ்ஞானிகளும் பெற்றுள்ளனர்.

விண்வெளியில் உள்ள புற ஊதாக்கதிர்கள் அதாவது Ultra Violet rays மற்றும் எக்ஸ்ரே கதிர்கள் இயக்கம், பல்வேறு நட்சத்திர மண்டலங்களின் நிலைகள் பற்றி ஆய்வுகள் நடத்தவும் நமது விஞ்ஞானிகளுக்கு திறமிகு கருவிகள் விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது.

இது வருங்கால விண்வெளி பயணங்களுக்கும் குடிபெயர்தல்களுக்கும் முன்னோடி ஆய்வுகள் துவங்க வழி பிறந்து விட்டது.

நாம் இதுவரை அணுவில் உள்ள எலக்ட்ரான், புரோட்டான்கள் அதாவது அணுசக்தி இயக்கத்தின் ஒரு பகுதியை பற்றி புரிய முடிந்துள்ளது. ஆனால் நியூட்ரான்கள் அதாவது மின்னூட்டம் ஏதுமில்லா அணுத் துகளின் ஓர் அங்கம் என்ன செய்கிறது? என்பதை விவரமாக ஆராயத் துவங்கி உள்ளோம்.

பூமிக்கு அருகில் இதுபற்றிய ஆய்வுகளுக்கு பூமிக்கு அடியில் சுரங்கம் அமைக்க முடிவு செய்தாலும் அப்பகுதி வாழ் மக்களுக்கு ஏற்படக்கூடிய அபாயங்களை யோசித்தாக வேண்டும்.

ஏதும் செய்யாது என நம்மில் பலரும் நம்பினாலும் ஏதுமில்லை என்று ஓர் வெறுமையான ஓர் குழுமம் ஏதேனும் பாதகத்தை ஏற்படுத்தாது என்பதை எப்படி நம்பிக்கையுடன் விவரிப்பது?

இந்த மர்மங்களை புரிந்து கொள்ள வேண்டிய காலகட்டமும் நெருங்கி விட்டது.

அடுத்த சில ஆண்டுகளில் மனிதன் வெளிவட்டப் பாதைக்கு சென்று வர இருக்கிறார். அவர்கள் சந்திக்க இருக்கும் வருங்கால சிக்கல்களுக்கும் இஸ்ரோ அறிவுபூர்வ தீர்வுகள் தரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

2023 இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திராயன் 3 விண்கலத்தை சந்திரனின் புவிஈர்ப்பு காற்று மண்டலம் வரை சென்று சாதித்தது. அச்சமயத்தில் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தறையிறங்கி ஆய்வுகள் நடத்த ‘விக்ரம் ரோவர்’ இயந்திரத்தையும் உபயோகித்தது.

பின்னர் வெயில் வராத சுமார் 15 நாட்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் கிடைக்காது என்பதால் ‘விக்ரம் ரோவர்’ Sleep Mode அதாவது தானே தூங்கச் சென்று விடும் நிலைக்குச் சென்றது.

ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக அதை மீண்டும் தட்டி எழுப்ப முடியாமல் திணறி வரும் இஸ்ரோ விஞ்ஞானிகள் அது மீண்டும் விழித்துக் கொண்டு செயல்பட வைக்கலாம் என நம்புகிறார்கள்.

அது செயல்படாமல் தூங்கிக் கொண்டிருக்க நிலவில் உள்ள விண்வெளி மின்காந்த கதிர்வீச்சுகளின் தாக்கமும் இருக்கலாம் என்பதால் தற்போது செலுத்தப்பட்டு இருக்கும் ‘எக்ஸ்போ சாட்’கண்டுபிடிப்புகள் விண்வெளியில் சரிவர இயங்கும் கருவிகள் வடிவமைப்புக்கும் தேவைப்படுகிறது.

மேலும் இன்று நாசா விண்வெளியில் செலுத்தியுள்ள சக்தி வாய்ந்த தொலைநோக்கியான ‘ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்’ கடந்த இரண்டு ஆண்டுகளில் பல அற்புதமான விண்வெளி காட்சிகளை படம் பிடித்து அனுப்பிக்கொண்டு இருக்கிறது.

அண்டசராசரம் கிட்டத்தட்ட 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியபோது ஏற்பட்ட ஒளி சிதறல்களை பார்க்க வைத்துள்ளது.

ஆக அண்டசராசரம் துவக்கம் அதற்கும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பானது என்ற புதிய வாதத்தை ஆதாரபூர்வமாக நமக்கு காட்டி வருகிறது.

அண்டசராசரம் சங்கதிகளை பூமியின் ஈர்ப்புக்கு அப்பால் விண்வெளியில் இருந்து உற்று கண்காணித்தால் மட்டுமே கதிர்வீச்சுகளின் தாக்கத்தை அறவே நீக்கிவிட்டு பார்க்க முடியும்.

ஆகவே இவ்வாண்டு துவக்கத்தில் இஸ்ரோ துவக்கி இருக்கும் விண்வெளி ஆய்வுகள் வருங்கால மனிதகுல மேன்மைக்கு மிக அவசியம் தேவைப்படும் அனுபவ பாடங்களாக இருக்கப்போகிறது.

அடுத்த மைல்கள் நாம் மனிதனை விண்வெளிக்கு அனுப்பி வாழ வைப்பது என்ற லட்சிய கனவுக்கும் இப்போதைய கருவிகளின் ஆய்வுகள் மிகவும் உதவிகரமானதாக இருக்கக் போகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *