செய்திகள்

விண்வெளிக்கு 2 ஆளில்லா விண்கலம் அனுப்ப திட்டம்

பெங்களூரு,ஜன.11–

2020 டிசம்பர் மற்றும் 2021 ஜூலை மாதத்தில் 2 ஆளில்லா விண்கலங்கள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:–

2018 ல் 17 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2018 ல் 2 ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் விண்ணில் ஏவுப்பட்டுள்ளது. நிலவுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்ட பணிகள் நடந்து வருகிறது. இது இஸ்ரோவின் மிகப் பெரிய திருப்பு முனை திட்டமாகும்.

2020 டிசம்பர் மற்றும் 2021 ஜூலை மாதங்கள் 2 ஆளில்லா விண்கலங்கள் விண்ணிற்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போன்று 2021 டிசம்பரில் ஆட்களை சுமந்து செல்லும் விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. ககன்யான் திட்டத்தின் ஆரம்ப கட்ட பயிற்சி இந்தியாவிலும், உயர்மட்ட பயிற்சிகள் ரஷ்யாவிலும் அளிக்கப்படும். இந்த பயிற்சி குழுவில் பெண் விண்வெளி ஆய்வாளர்களும் இடம்பெறுவர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *