நாடும் நடப்பும்

விண்ணில் சாதிக்கும் குறைந்த செலவு ராக்கெட்டுகள்: இந்தியாவின் தொடர் வெற்றிகள்

ஜப்பானின் சறுக்கல்


ஆர்.முத்துக்குமார்


பல உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை அறிவித்து நடைமுறைப்படுத்தியது அல்லவா? அதன் பின்விளைவுகள் ரஷ்யா அனுபவிக்கிறதா? என்பது பற்றி விவாதங்கள் ரஷ்யாவில் பாதிப்பு இல்லை என்று சொல்ல உண்மையில் பாதிப்பு பல வளரும் பொருளாதார நாடுகளுக்குத் தான் என்று தான் சொல்ல வேண்டும்!

அந்த வரிசையில் பல நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. ரஷ்யாவின் ‘சோ யூஸ்’ ராக்கெட் பல நாடுகளின் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக வெளியிட்ட பாதையில் நிலைநிறுத்தி வந்தது. ஆனால் தற்பொழுது ரஷ்யா ‘சோ யூஸ்’ சேவைகளை நிறுத்தி விட்டது.

இந்த நிலையில் ஜப்பான் விண்வெளி விஞ்ஞானத்தில் சாதிக்க விறுவிறுப்பாக களம் இறங்கி விட்டது.

ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஜாக்சா ( JAXA) மிக குறைந்த செலவில் விண்வெளி சேவைகளை தர மிக நவீன ராக்கெட்டை உருவாக்கியது. எச்3 ரக ராக்கெட்டின் உற்பத்தி விலை முன்பை விட பாதி விலையில் வடிவமைத்து செயல்பட வைக்க முடிவு எடுத்தனர்.

இப்புதிய ராக்கெட்டில் பிற நாடுகளின் தேவைகளை மிக குறைந்த கட்டணத்தில் சேவையாகத் தர இருந்தனர். கடந்த ஆண்டு எச்3 ரக ராக்கெட்டை விண்ணில் செலுத்த ஆயத்தமானார்கள். ஆனால் அப்போது கண்டுபிடிக்கப்பட்ட குறைபாடுகள் காரணமாக விண்ணில் செலுத்தப்படவில்லை. அதை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் சோதனை வெள்ளோட்டமாக பறக்க வைக்க முயற்சித்தனர். ஆனால் வானில் சீறிப்பாய்ந்து 300 கிலோ மீட்டரை கடந்துவிட்ட நிலையில் இரண்டாவது நிலை ராக்கெட் இயங்கும் கட்டத்தில் புது கோளாறு எழ ஏவப்பட்ட ராக்கெட் வெடித்து சிதறிவிட்டது.

இது ஜப்பானின் விண்வெளி வளர்ச்சி சகாப்தத்திற்கு மிகப்பெரிய சரிவு மட்டுமின்றி, இறுகிய பொருளாதார நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஜப்பான் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்பும் ஆகும். இப்படி பல ஆயிரம் கோடி நிதியை நொடியில் இழந்து விட்டாலும் மீண்டும் வெற்றியை உறுதி செய்ய தயாராகி விடுவோம் என்று உறுதியாக இருக்கிறார்கள்.

ஜப்பானின் வெற்றி பயணங்களில் சாதித்து கொண்டிருப்பது எச்2எ ரக ராக்கெட்டுகள் ஆகும். இதுவரை 46 ஏவுதல்களில் ஒன்று மட்டுமே விபத்தில் சுக்குநூறாக வெடித்து சிதறி இருக்கிறது. ஆக 45 முறை 2001 இல் இருந்து ராக்கெட் ஏவுதலில் வெற்றி அடைந்துள்ளது.

அந்த வெற்றி பயணங்களை கண்ட எச்2ஏ ராக்கெட்டுகளின் விலை 100 மில்லியன் டாலர்கள். ஆனால் தோல்வியை கண்ட எச்3 ரக ராக்கெட்டை மிக குறைந்த விலையில் வடிவமைத்துள்ளார்கள். இதற்கான செலவு டாலர் 50 மில்லியனையும் விட குறைவாகும்.

அமெரிக்காவில் நாசா உட்பட பல அமைப்புகள் ராக்கெட் சேவையை எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.

அவர்களின் தேவையை உணர்ந்தே Spare+ நிறுவனம் தனியார் ராக்கெட் சேவையை அறிமுகப்படுத்தியது. அதைப் போன்றே ராக்கெட் சேவையை தரும் எதிர்பார்ப்புடன் ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டது.

கடந்த 10 ஆண்டுகளில் ஜப்பானிய தனியார் நிறுவனம் சந்திரனுக்கும் விண்களத்தை அனுப்பியும் இருக்கிறது.

ஜப்பான் விண்வெளி மையம் மனிதனுடன் ராக்கெட் பயணத்திற்கு தீவிரம் காட்டியும் வருகிறது.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சரக்குகள் அனுப்புவது, விண்வெளி ஆராய்ச்சியாளர்களை அனுப்புவது எனப் பல புதுப்புது வர்த்தக வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது, அதை மனதில் கொண்டு உலக நாடுகள் ராக்கெட் சேவைகளை தர ஆயத்தமாகி வருகிறது.

சோவியத் ரஷ்யா தான் முதன்முதலில் ஸ்புட்னிக் ராக்கெட்டை 1957–ல் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது.

இன்றோ அமெரிக்கா 5,534 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி உள்ளது. ரஷ்யா 3611 முறையும் சீனா 731 முறையும், பிரிட்டன் 515 முறையும் ஜப்பான் 300 முறையும் பிரான்சு 130 முறையும் ஏழாவது இடத்தில் இந்தியா 127 முறையும் ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி இருக்கிறது.

ஜெர்மனி 114 முறையும் கனடா 82 முறையும் மிகச்சிறிய நாடான லக்சம்பர்க் 53 முறையும் அனுப்பி சாதித்துள்ளது.

அப்பபட்டியலில் இத்தாலி, தென்கொரியா, பிரேசில், ஆஸ்திரேலியா, இஸ்ரேல், ஸ்பெயின், உருகுவே, இந்தோனேசியா, அர்ஜென்டீனா, ஸ்வீடன், மெக்சிகோ, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகளும் மற்றும் தைவானும் அப்பட்டியலில் இருக்கிறது.

இந்த நாடுமுகளின் ராக்கெட் ஏவுதல் விஞ்ஞானத்தில் சாதித்து வந்தாலும் 11 நாடுகளில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் இருக்கிறது.

அந்த ஏவு தள சேவைகளை தரும் முக்கிய நாடுகளில் நமது இஸ்ரோ அமைப்பும் இருக்கிறது.

ஜப்பானின் முயற்சி இம்முறை தோல்வியை சந்தித்தாலும் விரைவில் மிகக் குறைந்த விலை ராக்கெட்டை விண்வெளி வீரர்களுடன் பறக்க வைத்து சாதிப்பார்கள் என்று உலக நாடுகள் எதிர்பார்க்கிறது.

இந்தியாவும் மிக விரைவில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பி, பத்திரமாக பூமிக்கு திரும்ப வரும் காட்சியை காண இருக்கிறது.

அதாவது மீண்டும் மீண்டும் உபயோகப்படக்கூடிய ராக்கெட்டுகளை தயாரிப்பதில் இந்தியா தயாராகி வருகிறது.

ரஷ்யாவின் சோயூஸ் சாக்கெட்டுகள் தரையிறங்கி இருப்பதால் ரஷ்யாவை நம்பி இருக்கும் பல நாடுகள் இந்தியாவில் விண்வெளி உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறது, இது நமது பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உந்துதல் சக்தியாகவே இருக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *