செய்திகள்

விண்ணில் ஏவப்பட்ட ஈரான் செயற்கைகோள்

தெக்ரான், செப். 28–

ஈரான் தனது தொலையுணர்வு செயற்கைக்கோள் ஒன்றை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இது குறித்து அந்த நாட்டு தகவல்தொடர்புத் துறை அமைச்சர் இஸா ஜரேபூர் கூறியதாவது:–

விண்வெளியிலிருந்து படமெடுக்கக் கூடிய தொலையுணா்வு செயற்கைக்கோளான ‘நூர்-3’ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பூமிக்கு 450 கி.மீ. தொலைவிலிருந்தபடி அந்த செயற்கைக்கோள் செயல்படும் என்று கூறியுள்ளார்.

ஈரான் அணு ஆயுதம் உருவாக்குவதைத் தடுப்பதற்காக அந்த நாட்டின் மீது அமெரிக்காவும், பிற மேற்கத்திய நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. அத்தகைய அணு ஆயுதங்களை ஏந்தி தொலைதூரத்தில் தாக்குதல் நடத்தக் கூடிய ‘பலிஸ்டிக்’ வகை ஏவுகணைகளை ஈரான் ஆய்வு செய்வதற்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது.

பதட்டம் ஏற்படுமா?

அந்தத் தடைகளை மீறி ஈரான் அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை மேற்கொள்ளும்போது, ஈரானுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரிப்பது வழக்கம். இந்தச் சூழலில், விண்ணில் செயற்கைக்கோளை செலுத்துவதற்கான ராக்கெட்டிலும் பலிஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்பதால், நூர்-3 செயற்கைக்கோளை ஈரான் விண்ணில் செலுத்தியுள்ளது, பதற்றத்தை மீண்டும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *